தங்கள் தவறுகளை மறந்த வழுக்கைத் தலையர்கள், மெத்தப் படித்த, மரியாதைக்குரிய, வயதான வழுக்கைத் தலையர்கள், காதல் நோயால் பீடிக்கப்பட்டுப் படுக்கையில் புரண்ட இளைஞர்கள் சவுந்தர்யத்தின் மடக்காதுகளுக்காக யாப்பமைத்த புகழுரை வரிகளைத் திருத்தி உரை எழுதுகிறார்கள். இவர்கள் எல்லோரும் இங்குமங்கும் செல்வார்கள்; எல்லோரும் புத்தகங்களுக்குள்ளேயே இருமுவார்கள் எல்லோரும் வகுப்பறைக் கம்பளங்களைக் காலணிகளால் தேயச் செய்வார்கள்; எல்லோரும் அடுத்தவர் நினைப்பதையே நினைப்பார்கள்; எல்லோருக்கும் அடுத்தவருக்குத் தெரிந்தவனையே தெரிந்திருக்கும். கடவுளே, இவர்களது காட்டுலஸ்* இந்தப் பக்கமாய்க் கடந்தால் என்ன தான் சொல்வார்கள் இவர்கள்? The Scholars - W B Yeats
* காட்டுலஸ் – 2000 வருடங்களுக்கு முற்பட்ட ரோம் நகரக் கவிஞன். காதல் கவிதைகளுக்காகப் புகழ் பெற்றவன்.
ஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா