மழைமாலைப் பொழுது

மு. முத்துக்குமார் பக்கவாட்டில், பளிச்…பளிச்… என தொடுவான மின்னல் விட்டு விட்டு கருமேகங்களைத் துளைத்து வெட்டிச்சீரான இடைவெளியில் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தது. ஆங்காங்கே இருந்த, பூசிய வெள்ளை வர்ணம் மங்கிய, நாற்கரச் சாலை திட்டத்திலிருந்து தப்பிப் பிழைத்த சிமெண்ட் வீடுகளைப் போர்த்தியிருந்தன கருமேகங்கள். மங்கிய அந்த வெள்ளை வர்ண வீடுகளையும் பளிச்சென காட்டின அக்கருமேகங்கள். எந்நேரத்திலும் தன் எடை தாளாமல் பிய்த்துக் கொள்ளும் நிலையிலிருந்த சூல்கொண்ட அம்மேகங்களின் தவிப்பை பயணித்துக் கொண்டிருந்த வண்டியின் கண்ணாடி வழியே உணர்ந்தவனாய், … Continue reading மழைமாலைப் பொழுது