சில நாட்களுக்குமுன்
பூத்து மணத்த மலர்கள்
சருகுக் குப்பையாக
பரவியுள்ளது சாலையோரம், இன்று
நேற்றிரவு
கவர்ந்த வண்ணத்துடனும்
சுவைக்கத் தூண்டிய
வாசத்துடனுமிருந்த
தீஞ்சுவை உணவு
நொதித்து வழிந்துகொண்டிருக்கிறது
குப்பை வண்டியில் இப்போது
முன்பு, பேரொளி பொலியும்
அருங்கனவுகள் பொதிந்திருந்த காதலும் அன்பும்
நிராகரிக்கப்பட்டு ,
விரவியுள்ளது வீதியெங்கும்
வஞ்சமும் வெறுப்புமாய்