நலுங்காத சிறு தீபம் போலும்
நனுங்காத சிறு மலைச்சுனை போலும்
இளவெந்தண்மையுடன்
நிதமும்
நினைவிலெழுகிறது
எங்களின் அந்நாள்
தினங்களைக் கொண்டு
தொடுக்கப்பட்ட
வெளிவட்ட சாலையையென
வருடத்தைக் கடக்கையில் ,
எதிர்ப்படும் அந்நாளை ..
அகம்விரிய நான்
எதிர்கொள்ளும்போது..
மைல்கற்களில் ஒன்றென அதைக் கடந்து
நோக்கில்லா விழியால் எனை வினவுகிறாள் ..
என்னான்ற இப்ப