ஒவ்வொரு துளியாக
ஆவியாகிறது எப்போதும்
அதற்கிணையான
வெம்மையை அளித்துவிட்டு
உயிரே வெந்து
ஆவியாகும் கணத்தில்
மெல்லிய சாரலாய் தொடங்கி
துளித் துளியாகவே
பொழிகிறது
முந்திவரும் சில துளிகளே
உள்நுழைந்து உயிரையும் நனைத்துவிட
தொடர்ந்து பொழிந்து வழிவதை
சேமிக்க முயலாமல்
மனம் குளிரக் காண்கிறேன் …
வேறு வேறல்ல
மழையும் அவளன்பும்