சிறிதாகிவிட்ட சட்டை
தம்பிக்கு.
மீந்து விட்ட
இட்டிலியை
இட்டிலியை விடவும்
மேலான உப்புமாவாக
ஆக்கி விடும்
பாட்டியின்
மந்திரக்கை.
கெட்டுபோன உணவை
கொட்டிடலாம்
விரும்பாத புத்தகத்தை
இன்னொருவர் கைபிடிக்க
விட்டிடலாம்
எங்கேயும்.
பிளாஸ்டிக் துண்டுகள்
பிளாஸ்டர் ஆஃப் பாரீஸால் ஆன
திண்டுகள்
களிமண் வடிவங்கள்
கண்ணாடிச்சில்லுகள்
கான்கிரீட் குண்டுகள்
மரச்சீவல்கள்
உலோகப்பட்டைகள்
மற்றும்
வெட்டி மீந்தவை
அட்டையால் ஆனவை
குருதியில் நனைந்தவை
உருவற்றவை
என,
திருப்தியாக வராத
கவிதைகளை
என்ன செய்வது?