அடுக்குமாடி பீரோக்கள்
புறக்கணித்த
பழைய துணிகளை
மூட்டைக்கட்டியவன்
ஒவ்வொன்றாய்
துவைத்து தேய்த்து
புதியதாக்க முயல்கிறான்..
ஆடைகளில் ஏறிய
அழுக்குகளையும்
அனுபவங்களையும்
அழித்திட்டதாய்
அனைவரும் ஏற்க
அழகுற மடித்து
நெகிழியுறையுள் நுழைத்து
அடுக்கிவைத்து விற்கிறான்…
பிழைப்புக்காய்
பெருநகரம் புகுந்தவர்கள்
மீந்திருக்கும் சன்மானத்தின்
சிறுபகுதியை செலவழித்து
வாங்கிச்செல்கிறார்கள்
அவர்களுக்கான
புதிய அனுபவங்களை …..
நல்ல தமிழில் நன்கு எழுதப்பட்ட கவிதை.. வாழ்த்துக்கள்..
எதார்த்தம். உள் பெரும் பிரளயம்….. லாவகமான வெளிப்பாடு அருமை.
கவிதைக்குள் ஒன்றுமில்லை.ஆனால் முழு நீள சோகப் படம் சமூக வெளிப்பாடோடு ஒடுகிறது. கடுகு ஆனால் காரம்…..