கே. ராஜாராம்

ஆதவன் தருவான் உடலுக்கு உறுதி – கே. ராஜாராம் கவிதை

கே. ராஜாராம்

நட்ட நடுப்பகலில் உச்சி வெயிலில் நடப்போர்க்கு
வட்டத் திகிரி தருவான் வைட்டமின் D – ஏ சி
கட்டடத்துள் வாழ்வதும் ஒரு வாழ்வா? இக்கால
கட்டத்தின் கட்டாயம் இதை உணர்வதே!

சீரகம் தரும் சூரியனை உபாசித்து
பேரகப் பெரு வெயிலில் நடவீர்! நடவீர்!
தாரக நாமம் உள்ளத்துக்கு உறுதி போல் -பகல்
தாரகைத் தலைவன் தருவான் உடலுக்கு உறுதியே!

அருள் ஒளி ஆதித்ய கிரணங்கள்- சத்துப்
பொருள் தரும் உடலின் வலிமைக்கே- அதுவே
இருள்சூழ் வாழ்வில் அகல் விளக்கென
மருள்மிகு மனத்துள் பாய்ந்திடுமே!

உடலின் உயிரே சூரிய வெளிச்சம- கீழ்க்
கடலில் உதிக்கும் இறை வெளிச்சம்- அது நம்
குடலுள் தூண்டும் சத்தின் பெருமையை- ஒரு
மடலில் பதித்தேன் மக்கள் நலனுக்கே!