சிவசக்தி சரவணன்

ஒன்றாம் எண் சந்துக்கும்/ Lane Number One

ஒன்றாம் எண் சந்துக்கும்
பிட்சாடனர் சந்நிதிக்கும்
நேர்கோட்டு வழி இருக்கிறது
சிறு குறி உருவப் பால் கொழுக்கட்டை
நிவேதனத் துணையுடன்

ரசம் போய்விட்ட வெண்கல உருளிகளில்
சுயத்தையே படைக்க வந்து கொண்டிருக்கும்
திருப்பூவனத்துப் பொன்னனையாளுக்கும்

ஆலவாய்ச் சித்தருக்கும்
இடையே
கடக்க முடியாத வைகை மணல்

-ந. ஜயபாஸ்கரன்

Connecting Lane Number One
and the shrine of Pitchaadanar
is a straight-line path;

Keeping apart
Ponnanaiyal of Thirupoovanam, who
        under the guise of offering
        sweet dumplings soaked in milk,
        which look like tiny penises
        in bronze bowls that have lost their silvering,
is on her way to offer up her own self,
from the Ascetic of Alavai, lie
the forbidding sands of vaigai

ஸ்திதி/ State of Affairs : ந. ஜயபாஸ்கரன் கவிதை சிவசக்தி சரவணன் மொழியாக்கம்

A Translation by Sivasakthi Saravanan

ஸ்திதி
— ந.ஜயபாஸ்கரன்

ஆவணி மூலத்து இரவில்
மணல்பாயும் வையைக் கரையில்
பரியாக வேண்டி வளர்ந்து வரும
கோயில் 
நரி
கம்பி வேலி தப்பி
சோர்ந்து நிற்கும்
காந்திசிலை தாண்டிக் 
கடைமுன் வைத்த
பிளாஸ்ட்டிக் வாளி
அழுக்கு நீரைச்
சீப்பிக் 
குடிக்கும்

பயந்து


******************

State of Affairs
— N.Jayabaskaran

On the night of Avani Moolam
By the banks of Vaigai
with its flowing sands
the temple fox
reared to turn horse
breaks out of the iron fence
and running past
a tired-looking Gandhi statue
slurps dirty water
from the plastic bucket
kept in front of a shop

frightened

******************************

ஆங்கில மொழியாக்கம் – சிவசக்தி சரவணன்

கைகால்களை நீட்டி… – வெ. அமலன் ஸ்டான்லி கவிதை மொழியாக்கம்

கைகால்களை நீட்டி
ஈரமாக்கிக் கொள்ளும்
பிஞ்சுகளின் கள்ளத்தனம்.

டீச்சரின் பிரம்பு வீச்சில்
வராண்டாவில் அடங்கும்
கூக்குரல்கள்
பாழ் கழிவரைவிட்டு வெளியேறி
கொடிமரத் திடலில்
நீர் ஊறிக் கூத்தாடும் விடலைகளின்
ரகசியப்பை பிதுங்கி விழும் சீட்டுக்கட்டுகள்.
மெலிந்து சிரித்து பார்வை மாற்றாது நோக்கும்
மழலையரின் கலவர ஆர்வம்.
எதிர்பாராத குறுமழைக்கு
யாரோ தவறவிட்ட சரித்திர நூல்
மண்பட்டு நனைகிறது
மரத்தடியில் கவனிப்பாரற்று.

- வெ. அமலன் ஸ்டான்லி

*****************************************************

Furtively the little ones
stretch and wet
their hands and feet
A whiplash of the teacher’s cane
shuts out the clamour in the veranda

Emerging from the run-down washroom
adolescent merry-makers
dance about, soaking in rain
at the square with the flag mast-
decks of cards popping out of secret pouches

With thin smiles and rapt eyes,
the toddlers have a look
of awestruck wonder

In the sudden drizzle
a history textbook someone had lost
gets damp and muddy
under a tree
unnoticed by all

*****************************************************

மக்கள் கூடுமிடம் – மொழிபெயர்ப்பு பற்றிய ஒரு குறிப்பு

நான் உண்மையில் ஓரளவு ஞாபகம் இருந்த தேவதச்சனின் ஒரு கவிதையை மொழிபெயர்க்க விரும்பி, அதை எடுத்துப் பார்த்தபோது அதில் குறிப்பாக அதன் கடைசி வரிகளை எப்படி ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது என்று தெரியாமல் இருந்தது. சரி, வேறு ஏதாவது எளிமையாக இருக்கிறதா என்று சில புத்தகங்களைப் புரட்டியபோதுதான் அமலன் ஸ்டேன்லியின் மக்கள் கூடுமிடம் என்று துவங்கும் கவிதையும் இன்னொன்றும் அகப்பட்டன.

அந்த தேவதச்சன் கவிதை-

இம்
மேஜை டிராயரில்
கடல்,
கட்டிலுக்கடியில் விண்பருந்து
விளக்கு ஒயரில்
உலவும் புலி,
கண்ணாடி டம்ளரில் ஓடாது
வெளியே பார்த்துக்கொண்டிருக்கும் ஜலம்
கம்பிகளில்லா
சிறைச்சாலை உலகம்
சிறைகளற்ற சுவர்கள்
இவ்வறை

மக்கள் கூடுமிடம்/ Public Spaces – கவிதை மொழியாக்கம்

Translated by Sivasakthi Saravanan

மக்கள் கூடுமிடும் களமாகும்
குடும்பத்தோடு தெருவோரம்
வித்தை காட்டும் கழைக்கூத்தாடி
விரிப்பில் விழுந்தவற்றை
எண்ணிப் பார்க்காமலே
மூட்டை கட்டுகிறான்
மேளக்காரன்

அந்தரத்தில் தூக்கிப்போட்டு
பிடிக்கப்பட்ட சவலைச் சிறுமி
தூங்கிப் போய்விட்டாள்
நடைபாதையில்

வேறொரு ஆட்டத்திற்கு
கலைவுறும் பார்வையர்

நெம்பிப் பெயர்த்த
கம்பத்தின் பதிவாக
குழிபறித்துக் கிடக்கிறது
தெரு
 • (வி. அமலன் ஸ்டேன்லி “படகினடியில் கொஞ்சம் வெப்பம்” தொகுப்பில் உள்ள கவிதை)

Public spaces
become the fields of play
The street performer
stages his tricks
with his family

The drummer packs up,
makes a bundle of the alms-cloth
​a​nd all within,
​not ca​ring to count

The puny girl
Tossed high and caught
has fallen asleep
on the footpath

Spectators disperse
for another show

Marking the memory
of the wrenched out post
is the street
with its dug up hole.