முனியாண்டி ராஜ்

இரவுக்கு வெளியே

முனியாண்டி ராஜ்

இரவுக்கு வெளியே
இறைந்து கிடக்கிறது பகல்
எடுத்து அணிந்த கொள்ளா நிலையில்
முகம் பதுக்கி நிற்கிறோம்
எப்பொழுதோ கூறிச் சென்ற வார்த்தையைத்தான்
தண்டவாளங்களின் உரசல்கள்
காதோரங்களில் தேய்க்கின்றன
மீண்டும் நினைவுக்குள்ளிருந்து உருவுகிறேன்
விட்டுச் சென்ற பாலத்தின்கீழ்
நீரோட்டம் வறண்டு நிற்கிறது!