மு தனஞ்செழியன்

கல்கத்தாவில் கோடை – கமலா தாஸ் – மொழியாக்கம் – மு தனஞ்செழியன்

மு தனஞ்செழியன்

என்ன பானமிது?
ஏப்ரல் சூரியனை பிழிந்து
என் கோப்பையில்
ஊற்றியது போலிருக்கிறதே.
நெருப்பை அருந்துகிறேன்.
மீண்டும் மீண்டும் அருந்துகிறேன்.
என்னவோர் அரிய நஞ்சாக
நரம்புகளில் பரவி
எனது துயரைச் சொக்க வைத்து
மெல்லியதோர் சிரிப்பாக
மனதை நிறைக்கிறது
சூரியன்களின் பொன்னொளி.
மணப்பெண்ணின் நடுக்கத்துடன்
குமிழிட்டு எனது
உதட்டைத் தொடுகிறது குவளை.
நினைவுகள் மங்குவதற்காக
இந்தக் கணத்தை மன்னித்து விடு அன்பே.
ஏப்ரல் சூரியன்களின்
சாற்றைக் கைக் குவளையில்
ஏந்தி மீண்டும், மீண்டும்
பருகித் திளைத்திருத்திருப்பதை
எப்படிச் சொல்வேன் அன்பே.