சரிதை

ப்ரான்க் மக்கோர்ட்டின் (Frank McCourt) நினைவுக்குறிப்பு நூல்கள்

– அஜய் ஆர். –

ப்ரான்க் மக்கோர்ட்டின் (Frank McCourt) நினைவுக்குறிப்பு நூல்களின் ட்ரிலாஜியில் இரண்டாம் நூலான ‘Tisஇன் இறுதியில், ப்ரான்க்கின் தாய் ‘ஆஞ்செலா’ (Angela) இயற்கை எய்தியபின் , அவரை அடக்கம் செய்துவிட்டு ப்ரான்க்கும் அவர் சகோதரர்களும்

“A mother’s love is a blessing
No matter where you roam.
Keep her while you have her,
You’ll miss her when she’s gone

என்ற பாடலை பாடுகிறார்கள். நூல் இப்படி முடிகிறது:

“We had lunch at a pub along the road to Ballinacurra and you’d never know from the way we ate and drank and laughed that we’d scattered our mother who was once a grand dancer at the Wembley Hall and known to one and all for the way she sang a good song, oh, if she could only catch her breath”

‘grand dancer ‘, ‘sang a good song’ போன்ற வார்த்தைகள் இள வயது ஆஞ்செலா குறித்து நம்முள் எழுப்பும் பிம்பத்திற்கும், திருமணத்திற்குப் பின்னாலான அவர் வாழ்வு குறித்து நாம் இந்த நினைவுக்குறிப்புகளில் இருந்து தெரிந்து கொள்வதற்கும்தான் எவ்வளவு வித்தியாசம். நாம் அறிந்த ஆஞ்செலா எத்தகையவர்? (more…)

விரும்பிப் படித்த கதைகள் : அன்றும் இன்றும்

– எஸ். சுரேஷ்

e a gardner

அத்தை பையனுக்காகக் காத்திருக்கும் நேரத்தில் நான் என் முதல் எனிட் ப்ளைட்டனைப் படித்து முடித்தேன். அவனோடு விளையாடுவதற்காக அத்தை வீட்டுக்கு ஒரு சனிக்கிழமையன்று கொஞ்சம் சீக்கிரம் போய் விட்டேன், ஆனால் அவன் பள்ளியில் அன்றைக்கு அரை நாள் வகுப்புகள் இருந்தன. அவன் வரும்வரை அவனுக்காக அங்கேயே காத்திருபப்து என்று முடிவு செய்தேன். அப்போது அங்கே எனிட் ப்ளைட்டன் எழுதிய சீக்ரட் செவன் புத்தகம் ஒன்று இருந்தது. அதை எடுத்து படிக்க ஆரம்பித்தவன், அது மிகவும் விறுவிறுப்பாக இருக்கவே அத்தை பையன் ஸ்கூல் விட்டு வருவதற்கு முன்னரே படித்து முடித்தும் விட்டேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்த முதல் புத்தக நினைவு இதுதான் என்று நினைக்கிறேன். அப்போது நான் நான்காவதோ ஐந்தாவதோ படித்துக் கொண்டிருந்தேன்.

செகந்திராபாத்தில் எனக்கு வாய்த்த உலகைவிட முற்றிலும் மாறுபட்ட உலகம் எனிட் ப்ளைட்டனின் பிரிட்டிஷ் உலகம். அதனால் அது அதிசயமாகவும் வசீகரமாகவும் இருந்தது. சின்னஞ் சிறுவர்கள் துப்பறியும் நிபுணர்களாக இருக்க முடியும் என்பதும் அவர்களால் குற்றங்களைத் துப்பு துலக்க முடியும் என்பதும் என் கற்பனையைக் கிளர்த்தின. வெகு விரைவிலேயே எனிட் ப்ளைட்டன் விவகாரத்தின் தவிர்க்க முடியாத அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டேன்: பேமஸ் பைவ், பைவ் பைண்ட்அவுட்டர்ஸ், யங் அட்வென்சரர்ஸ் இத்யாதி வகையறாக்களின் செயல்பாடுகளை தேடித்தேடி வாசித்தேன். பெண்கள் வாசிக்கும் மலோரி டவர்ஸ் போன்ற புத்தகங்களைத் தொடவில்லை என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. (more…)

வால்டர் பெஞ்சமின்

Colin Dickey on Walter Benjamin: A Critical Life : –

ஒரு மாதிரியான டெக்னோ-பியூச்சரிஸ்ட் சியர்லீடிங்குக்கும் (“எதிர்காலம் எத்தனை பிரகாசமாக இருக்கிறது!”) பிற்போக்குத்தன அபோகாலிப்டிய அங்கலாய்ப்புகளுக்கும் இடையே (“எதிர்காலம் நாசமாகிவிட்டது”) தடுமாறிக் கொண்டிருப்பதுதான் நம் வழக்கம் என்றால், பெஞ்சமின் வேறொரு வரலாற்றுப் பார்வையை நமக்கு அளித்தார் – நாம் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட ஒரு பேரழிவின் சிதிலங்களிடையே நடந்து சென்று கொண்டிருக்கிறோம், எச்சரிக்கையான துக்க அனுஷ்டித்தல் போன்ற ஒன்று மட்டுமே இங்கு நமக்கு அருளப்பட்ட மிகச்சிறந்த வரம். “துக்கங்கள் அனைத்திலும் மௌனத்துக்கான நாட்டம் உள்ளது. நம் உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்வதில் தயக்கம் இருக்கிறது என்பதைவிட, நம்மால் நம் உணர்ச்சிகளை வெளிக்காட்டிக்கொள்ள இயலவில்லை என்பதைவிட, இந்த மௌன நாட்டமே பெரிது,” என்று அவர் 1925ல் எழுதினார். “சோகம் உலகுக்கு வஞ்சம் இழைத்து அறிவு பெறுகிறது என்றால்,” அது தன், “உறுதியான சுய-நாட்டத்தில், உயிரற்ற வஸ்துக்களைத் தன் சிந்தையைக் கொண்டு அணைத்துக் கொள்கிறது, அவற்றை மீட்டெடுக்க”, என்றார். (more…)

ஆல்பெர் காம்யு

Entranced by Reality, A Life Worth Living: Albert Camus and the Quest for Meaning, Robert Zaretsky – IAN MARCUS CORBIN : –

ஆல்பெர் காம்யுவை pied-noir என்று சொல்வார்கள், பிரெஞ்சு அல்ஜீரியாவில் வாழ்ந்த பிரெஞ்சுக் குடிபிறப்பு. 1913ல் பிறந்தவர், தன் 25ஆவது வயதில் பிரான்சுக்குத் திரும்பினார். அங்கே அவர் பிரெஞ்சு தேசிய போராளிகளுடன் இணைந்தார், அதிகார அமைப்பை எதிர்த்து Combat என்ற செய்தித்தாளில் எழுதி அதன் பதிப்பாசிரியராக இயங்கினார். பின்னர் அவர் குறிப்பிடத்தக்க புகழ் பெற்ற எழுத்தாளரானார், 1960ல் ஒரு கார் விபத்தில் இறக்கும்வரை பெரும்பாலான காலம் பிரான்சில் வாழ்ந்தார். (more…)