எஸ். ராஜ்மோகன்
நீங்கள் படித்த புத்தகங்களில் சிறந்த பத்து அல்லது இருபது புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துச் சொல்லுங்கள் என்றால் அது யாருக்குமே மிகக் கடினமான காரியமாக இருக்கும்.
எவ்வளவு புத்தகங்களைப் படித்திருந்தாலும், அல்லது அந்த அளவுக்குப் படித்திருக்காவிட்டாலும் இப்படிப்பட்ட ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலை வெளியே சொல்வது கஷ்டம்தான். இதைச் செய்வதில் எப்போதும் ஒரு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது – முதன்மை நூலோ புகழ்பெற்ற நூலோ விட்டுப் போகலாம், அல்லது, பட்டியலில் இடம்பெறும் தகுதி இல்லாத ஒரு புத்தகத்தை நாம் பரிந்துரைக்கும் அபாயம் இருக்கிறது.
ஆனால் இயல்பிலேயே இந்த வேலை தனிநபர் விருப்பு வெறுப்புகளைச் சார்ந்தது எனும்போது அகவயத்தன்மையை முழுமையாய் தவிர்க்கவும் முடியாது. அதிலும் என்னைப் போன்றவர்களுக்கு, நாங்கள் செய்யும் பணி காரணமாக இது இமாலயச் சாதனையாகிறது. நானிருக்கும் பணியில் பல துறைகளைச் சார்ந்த புத்தகங்களில் ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான சொற்கள் படித்துக் கொண்டிருக்கிறோம். நாம் அனைவரும் மற்ற எதையும்விட நமக்கு விருப்பமான துறை சார்ந்த புத்தகங்களையே வாசிக்க முற்படுகிறோம் எனும்போது நாங்கள் பல்வகைப்பட்ட புத்தகங்களைப் படித்தாக வேண்டியிருப்பதாலேயே, சிறந்த பத்து அல்லது இருபது புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் பட்டியலிடுவது கிட்டத்தட்ட முடியாத காரியம் என்று சொல்லி விடலாம்.
முப்பத்தைந்து வருடங்களாக தொடர்ந்து புத்தகங்கள் படித்து வந்ததில் எது மிகவும் எரிச்சலூட்டும் விஷயமாக இருந்திருக்கிறது என்று பார்த்தால், அவ்வப்போது யாராவது ஒருவர், “என் வாழ்க்கையை மாற்றிய பத்து புத்தகங்கள்,” என்றோ அது போன்ற வேறு ஏதோ மூளையில்லாத கட்டுரையோ எழுதியிருப்பதைப் பார்ப்பதுதான். புத்தகங்கள் மட்டுமே நம் வாழ்வைத் தகவமைத்துவிடக் கூடுமா? புத்தகங்கள் பண்பாட்டுக் கூறுகள், மனிதனின் வாழ்வுக்கும் பணி மேம்பாட்டுக்கும் உருவம் கொடுக்கும் பல கருவிகளில் ஒன்று. அதேபோல், பண்பாடு என்று சொல்லும்போது, உருவமற்ற, உள்ளீடற்ற ஏதேதோ விஷயங்களைக் கற்பிதம் செய்துகொள்ள முற்படுகிறோம். பழக்க வழக்கங்கள், விழுமியங்கள், பாரம்பரியம், அமைப்புகள், சமூக கருவிகள், சட்டங்கள் என்றும் இன்னும் பலவும் கொண்டதே பண்பாடு. இப்படியிருக்கும்போது, புத்தகங்களை மட்டும் சிறப்பிப்பது போலித்தனமான, கவனம் ஈர்க்கும் உத்தியாகத்தான் எனக்குப் படுகிறது. (more…)
Like this:
Like Loading...