ராஜ் தவன்

கதை சொல்லும் படலம் -ராஜ் தவன் கவிதை

நகர்த்தும்
முட்களை நிறுத்தி
யோசிக்கவே செய்கிறேன்
ஒன்றும் அகப்படவில்லை
நீ கதை சொல்லச்
சொல்லிக் கேட்கிறாய்
நான் தினமும் ஒரேமாதிரி
சமாளிக்கிறேன்
நீ ஏமாற்றத்துடனும்
நான் குற்ற உணர்விலும்
தூங்கிப் போகிறோம்
நம் வீட்டுக் கிழக்கில்
தினமும் மஞ்சள் நிற
முட்டையிடும் வான்கோழி
அன்றும் என்னைக் கேலி
செய்து சிரிக்கிறது.