பூமியை புகைப்படம் எடுத்தபடி
தன் கருநீலச் சீருடையை
அணிகிறது வானம்
தன்னையும் எடுக்கும்படி
விதவிதமான
தோரணைகளை வெளிப்படுத்தியது
ஒற்றை ஆண் மயில்
காற்றின் அசைவுகளுக்கு
தலையாட்டும் மரமாக
நான் மாறியிருந்தேன்
தான் ஆடாவிட்டாலும்
தன் தசை ஆடத்தானே செய்யும்.
விபீஷணன்
பயணங்கள் – விபீஷணன் கவிதை
அவன் எளிதில் தூரத்து நாடுகளுக்குப் பயணிப்பான்
கடலொன்றும் பொருட்டல்ல
சில நாடுகள் சாமானியனால்
செல்ல முடியாதவை,
சில அவனாகவே உருவாக்கியவை.
குந்திட்டு அவன் வரைந்த சிறிய உலக வரைபடத்தில் இவ்வுலகத்தின்
அழகு மெருகேறியிருந்தது.
அவனோடு பயணித்த
குச்சிக்கு
வழிவிட்டு நின்றன
ஆழிமணலின் சிறிய கற்கள்.