டிச 06 2015

03rain1

 

மனிதக் கூட்டங்கள் எப்போதும் சாரிசாரியாக நகரத்தை நோக்கி புலம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். பொலியும் தெருக்களும், வண்ண விளக்குகளும், பிரகாசமான எதிர்காலமுமாக  அந்த நகரங்கள் தங்களுடைய பல்லாயிரக் கைகளுடன் எல்லோரையும் உள்ளிழுத்துக் கொள்கின்றன.   நகரத்தினுள் உறையும் ஒவ்வொரு ஜீவன்களும் ஒவ்வொரு கண்ணியாக அந்த நகரங்களை உருவாக்கி, மாற்றி அமைத்துக் கொண்டிருக்கின்றனர். இப்போதைய, இயற்கையுடனான நெடிய போராட்டத்தில் சோர்ந்து போய் கிடக்கும் நகரங்களுக்கு, நம்பிக்கை மலையென எழுந்து நிற்கிறது உலகெங்குமிருந்து உதவும் கரங்கள். நீண்டு கைப்பற்றும் ஒவ்வொரு உள்ளங்கையின் கதகதப்பினாலும் உரம்பெற்று தத்தளிக்கும் நகரங்களும், நகர மாந்தர்களும் மீண்டும் சோபையுற்று நிமிர்ந்து நிற்கப் போகிறார்கள்.  அதற்காக பதாகை தன்னால் இயன்ற பிரார்த்தனைகளையும் உதவிகளையும் செய்து கொண்டே இருக்கும்.

paavannan_flierஎழுத்தாளர் பாவண்ணன் சிறப்பிதழ் கிட்டத்தட்ட தயார் நிலையில் இருக்கிறது என்றாலும் சென்னை, கடலூர், புதுவை சுற்றுப்புறங்களின் வெள்ள நிலைமையைக் கணக்கில் கொண்டு வெளியீட்டை தள்ளிப்போடலாம் என முடிவு செய்திருக்கிறோம். ஆசிரியர் குழுவில் பலரும் மின்சாரம், தண்ணீர் இல்லாமல் இணையத்துக்கும் வரமுடியாமல் இருக்கிறார்கள். போலவே வாசகர்களும். பலர் உதவிக்காகக் களம் இறங்கியுள்ளதை அறிந்திருப்பீர்கள். துயரம். எப்படியேனும் குறைவான சேதாரத்தோடு தமிழக மக்கள் இதிலிருந்து மீள வேண்டும், மறுகட்டமைப்புகள் விரைவில் தொடங்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். ஜனவரி மாதத்துக்கு இந்த சிறப்பிதழை வெளியிடலாம் என்றிருக்கிறோம். தாமதமாவது எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.

பதாகை வாசகர்கள் தாமதத்துக்கு மன்னிக்கவும்..

image

 

பதாகையின் சென்ற இதழ் இங்கே.

 

Cat2

 

எஸ். சுரேஷின் ‘பூனைகள் மீது எங்களுக்கு யாதொரு வன்மமுமில்லை‘ கவிதை தொகுப்பு

 

 

தொடர்பு கொள்ள –

Advertisements