ஜனவரி 4, 2016

பதாகை நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். வாசகர்களின் நலம் முன்னிட்டு இந்த வாரம் இரண்டே இரண்டு படைப்புகள்தான் 🙂

ஆனால் இரண்டும் முற்றிலும் மாறுபட்டவை. வாசிக்கத் தவற வேண்டாம்.

கூலிக்காரன் – மு. வெங்கடேஷ் சிறுகதை

சரசக்காவின் மடியில் அமர்ந்திருந்த சங்கர், “டுமீல்னு வெடிக்குமா, தப்பு பண்ணிட்டு அந்த வில்லன் ஓடிப் போனானா, அப்போ கூலிக்காரன் பறந்து வந்து அடிப்பான். அப்போ டம்முன்னு கார் வெடிக்குமா, அப்போ தீ வருமா, அப்போ அந்த தங்கமெல்லாம் உருகி வடியுமா” என்று கதை சொல்லிக் கொண்டிருந்தான்.

புலம்பெயர்தலின் பின்னணியில் மானுடம் – Junot Diazன் DROWN சிறுகதைத் தொகுப்பு, ஒரு பார்வை – ஆர். அஜய் விமரிசனக் கட்டுரை

கருப்பொருள் காரணமாக இந்தக் கதைகள் ஒரே களத்தில் பயணித்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் புதியதாய், தனித்துவம் கொண்டதாய் மாறும் ரசவாதத்தை பாத்திரங்களுக்கிடையே உள்ள நுட்பமான வேறுபாடுகளும், டியாஸின் எழுத்து நடையும் நிகழ்த்துகின்றன. அவரின் உரைநடை ஏற்ற இறக்கங்கள் கொண்ட ஒரு பாடலாய் ஒலிக்கிறது. அதன் தாளகதிக்கு ஒரு இசைத்தன்மை உண்டு. டொமினிகன் ரிபப்ளிக்கின் வெயிலையும் புழுதியையும் விவரிப்பதாகட்டும், அதன் குறுகிய கெட்டோக்களைச் (Ghetto) சித்தரிப்பதாகட்டும், அதன் காப்பி தோட்டங்கள், கடல் (“the surf exploding into the air like a cloud of shredded silver”) என்று கரிபியன் உயிர் பெறுகிறது. 

வாசிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் கபாடபுரம் இரண்டாம் இதழ் செல்லலாம் – கண்ணைக் கவரும் வடிவ அமைப்பும் கருத்தைக் கவரும் படைப்புகளும் உள்ளத்தை அள்ளுகின்றன!

எம்மைத் தொடர்பு கொள்ள-