பதாகை 25 ஆக 2015

கடைசியில் கரைந்து போவது வலி மாத்திரை மட்டுமா… வலியும்தான். அதற்கு ஏன் வலிந்து இவ்வளவு அலட்டிக் கொள்ள வேண்டும்’ என்று கேட்கிறது ஆரூர் பாஸ்கரின் வலி மாத்திரை கவிதை. ஒரு சிறந்த நாவல் உருவாக்கத்தில் எழுத்தாளரின் பங்களிப்பைப் போலவே ஒரு தேர்ந்த எடிட்டரின் பங்களிப்பும் முக்கியமானது. ஹார்ப்பர் லீயின் ‘To Kill a Mockingbird’ உருவாக்கத்தில் பின்னணியில் முக்கிய பங்காற்றிய டே ஹோஹோஃப் பற்றிய அருமையானதொரு கட்டுரையை பீட்டர் பொங்கலின் தமிழாக்கத்தில் வாசிக்கலாம்.

தொடர்ந்து புகைபிடித்துக் கொண்டிருந்த, ஆழமான, கரகரப்பான குரல் கொண்ட ஹோஹோஃப், பிரதி என்று வந்தால் பிடிவாதக்காரர், தன் கருத்தைத் தீவிரமாக வலியுறுத்தும் எடிட்டர் என்றுதான் அனைவரும் சொல்கிறார்கள். டெல்பான்கோவின் “Grasse 3/23/66,” என்ற இரண்டாம் நாவலை அவர் ஐநூறு பக்கங்களிலிருந்து இருநூற்றுக்கும் குறைவானதாகக் கத்தரித்தார்- அவர் அப்படிச் செய்ததை இன்றும் டெல்பான்கோ நன்றியுடன்தான் நினைவுகூர்கிறார்.

லூயிஸ் கரோலின் Alice’s Adventures in Wonderland நாவலின் உருவாக்கமும் பல திருப்பங்களை கொண்ட சாகச பயணமாக இருந்ததைப் பற்றி அஜய் ஆர். இங்கே எழுதுகிறார். பொழுதுபோக்க வாய்வழி கதையாக தொடங்கிய சிறு வடிவம் எப்பையானதொரு காலத்தை கடந்து நிற்கும் நாவலாக பரிணமித்து நின்றது என்பது விந்தையானதொரு அனுபவம்.

கொலாட்கரின் மொழிபெயர்ப்பு தொடரில் அடுத்ததாக இவ்வாரம் The Cupboard கவிதையை தமிழாக்கித் தந்திருக்கிறார் காஸ்மிக் தூசி. பங்குசந்தை பத்திகளுக்கு பின்புறமிருந்து எட்டிப் பார்க்கும் தங்கநிறக் கடவுளர்களை கொண்ட அலமாரியை தேர்ந்த மொழியாக்கத்தில் வாசிக்கக் கிடைத்த வாய்ப்பிற்கு அன்னாருக்கு நன்றி.

பதாகையின் சிறுகதைப் போட்டிக்கு வந்த படைப்புகளின் பட்டியல். பங்கேற்பாளர்கள் எவருடயை கதையாவது விடுபட்டிருந்தால் editor@padhaakai.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

மித்யாவின் சாகசத் தொடர் தளராமல் இவ்வாரமும் தொடர்கிறது. தனக்கென புதியதொரு வகைமையை உருவாக்கிக் கொண்டு வளர்ந்து வரும் கதையில் திடீர் உத்தி மாறுதல்கள் ஏற்படுகின்றன.

பதாகையின் தனி அடையாளமாக ஒரு மொழிபெயர்ப்பு சிறுகதை. கட்டுப்பாடுகள் சீர்குலைந்த நிலம் மூர்க்கமான அதிகாரத்தினால் எப்படியானதொரு வடிவை அடைகிறது என்பதை எளிய நடையில் சொல்லிப்போகிறது ‘புலி‘.

தரவிறக்கம் செய்ய பிடிஎப் கோப்புpadhaakai 27 8 cover2

தொடர்பு கொள்ள-

Advertisements