பதாகை செப் 02 2015

[…சு வேணுகோபால் சிறப்பிதழ் அவருடைய வெகு சுவாரசியமான, விரிவான நேர்முகத்துடன், பல்வேறு பிரபலங்களின் கட்டுரைகளுடன் ஞாயிறு 6-செப்-2015 வெளிவருகிறது…]

பதாகையில் இவ்வாரத்திலும் கொலாட்கரின் ஜெஜூரி தொடர்கிறது. ஜெஜூரி, அதன் மொழி வளத்திற்காகவும், அறிவார்ந்த நேர்மைக்காகவும், ஆழமான கவித்துவ அனுபவத்திற்காகவும் போற்றப்படும் தொகுப்பு. அதன் மொழி சரளத்தை இயன்றவரையில் தமிழில் காப்பாற்றி கொடுக்கும் காஸ்மிக் தூசிக்கு பதாகை வாசகர்கள் கடமைப் பட்டிருக்கிறார்கள். இவ்வாரம் ‘நீலக் குதிரை‘யின் வண்ணத்தைப் பற்றிய கவிதை.

அதே நீல வண்ணம் வழியாக வானத்திலிருந்து விழுந்து கடலில் மூழ்கும் பிணைப்பை உணர்த்தும் குறுங்கதையாக Emil ostrovski எழுதுகிறார். ஒரு சிறிய பொறி கிளர்ந்து பெரும் வெளிச்சமாகிற தருணம் எப்போதாவது அமைகிறது. அது அப்படியே மறைந்தும் போய்விடலாம். ஓர் உறவின் படிமமாக அது மாறுவதை பீட்டர் பொங்கலின் தமிழாக்கத்தில் இங்கே வாசிக்கலாம்.

தெருநாய்களின் லட்சணங்களுக்கு ஞான மார்க்கத்தில் புது இலக்கணம் வகுக்கிறார் சோழக்கொண்டல்.

பதாகையில் சிறு தொடராக வந்த மித்யாவின் “அமேஸான் காடுகளிலிருந்து” கதை இவ்வாரத்துடன் நிறைவு பெறுகிறது.

“நாம் எங்கு செல்கிறோம்?”

“ஜார்ஜ் ட்ருக்கர் என்ற ஒரு பாவியின் வீட்டிற்கு”

“அவர் வீடு எங்கிருக்கிறது?”

அவளுக்கு பதில் தெரியவில்லை. பக்கத்தில் கோஷம் எழுப்பிக்கொண்டிருந்த பெண்மணியைக் கேட்டாள். அவளுக்கும் தெரியவில்லை. அவள் பக்கத்தில் இருக்கும் ஒரு கிழவரைக கேட்க, இப்படியாக இந்த கேள்வி பாதிரியாரின் செவிகளுக்கு எட்டியது. அவர் பக்கத்தில் இருந்த சர்ச் சிப்பந்தியிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார். அவர் அதைக் கேட்டு முழித்தார்.

பதாகையில் எஸ். சுரேஷ் எழுதிவந்த மிருகக் கவிதைகள் ஒரு தொகுப்பாக வெளிவர இருக்கிறது. முன்னுரையில் ‘இந்தக் கவிதைகளின் சித்திரிப்பு அபத்தமானதா, நகைப்புக்குரியதா, படிமங்களால் ஆனதா என்பதை உங்கள் வாசிப்பிற்கே விட்டுவிடுகிறேன்’ என்று ஜகா வாங்கிவிடுகிறார் எஸ். சுரேஷ். ஒரு புதிய வகைமையை நிலைநிறுத்தி தனக்கென தனி முத்திரை பதித்திருக்கிறார் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.

சிலவாரங்கள் விடுபட்டுப் போன ‘கவியின்கண்‘ தொடர் மீண்டும் எஸ். சுரேஷின் கைவண்ணத்தில் இவ்வாரம்.

முதலில் சொன்னது போல், எல்லா மதங்களும் வன்முறைக்கு எதிராக எச்சரிக்கின்றன. நாம் இந்தப் பூமியில் தற்காலிகமாக இருந்து போவதால் நம் கீழ்மைகளுக்கு இங்கு இடமில்லை என்கின்றன சமய நூல்கள். நாம் நம் செல்வத்தையும் அதிகாரத்தையும் பிரிந்து ஒரு நாள் இந்த மண்ணிலிருந்து மறையப் போய்வது நிச்சயம். எனில் ஏன் நாம் இவ்வளவு போராட வேண்டும், ஏன் இவ்வளவு கேவலமாக நடந்து கொள்ள வேண்டும், ஏன் ஆணவத்தால் நம்மை முன்னிறுத்திக் கொள்ள வேண்டும்? நீ சாகப்போவதும் காலம் உன்னை மறக்கப் போகிறது என்பதும் நிச்சயம் என்று தெரிந்தபின்னும்- நீ ஏன் கொலை செய்ய வேண்டும்?


suvenugopal_thumbnail

வரும் ஞாயிறு (06-செப்-2015) வெளியாகும்  சிறப்பிதழில் இடம்பெறும் நிலம் சுமந்தலைபவன்: சு.வேணுகோபாலுடனான நேர்காணலிலிருந்து சில சுவாரசிய பத்திகள்.

[…’அம்மா வந்தாள்’ படிக்கும்போது என்னான்னா, எனக்கு இன்னிக்கு வரைக்கும் ஒரு காட்சி இருக்கில்லீங்களா, அவன் உருவாக்கின கும்பகோணம் சித்திரம் இருக்கில்லீங்களா, அதை என்னால மறக்கவே முடியாது. அப்புவை ட்ரெய்ன்ல ஏத்தி, கொண்டுபோய் வேத பாடசாலைல விட்டுட்டு, அவன் திரும்பின கணம். அப்பா போன பின்னாடி- டாய்லெட் எல்லாம் அப்ப இருக்காது- காட்டுப்பக்கம் போய் ஒரு அரளிச்செடி பின்னாடி மறைஞ்சு அமர்ந்து, ‘நம்ம இங்க வந்து படிக்கணுமா,‘ என்று நினைக்கக்கூடிய இடங்கள்ல இருந்து…அந்த சித்திரங்கள் இருக்கில்லையா, landscape என்பது…ஒரு மனிதன் எப்படி இயங்குவான் – அப்படிங்கிறது. அந்த நாவல் அப்படியிருந்தது…]

[…சு.வேணுகோபால் என்கிறவன் ஒரு எழுத்தாளன் என்பதைவிட விவசாயி என்பது முக்கியமான விஷயம். முன்னாடி சொன்னீங்க, ஏன் non-fiction எழுதலை. முக்கியமா விவசாயம் தொடர்பா பெரிய பெரிய கட்டுரையெல்லாம் எழுதியிருக்கேன். மழை என்ற சிற்றிதழ்ல தொடர்ந்து எழுதினேன். ‘கவர்மெண்ட் மாப்பிள்ளைகள்’னு வந்துச்சு. ‘பட்டுத்தேரிய நுட்பங்கள்’னு ஒரு பெரிய கட்டுரை. அப்புறம் ‘முடிந்துபோய் விட்டது உழைப்பின் மேன்மை’ – எல்லாமே முப்பது நாற்பது பக்கம்…]

[…தமிழ் இலக்கியத்தை வளர்த்ததில் சிற்றிதழ்களுக்கு ஒரு பெரிய பங்கு இருக்கு. மிடில் மேகசின்னு சொல்றோம் – அறுபதுகள்ல ஆனந்த விகடனுக்கு ஒரு பங்களிப்பு இருக்குன்னு சொல்றோமில்லீங்களா? அது மாதிரி, எல்லோருமே எழுதுவதற்கான ஒரு வெளி இன்னிக்கு இணையதளத்துல கிடைச்சிருக்கு. அவங்கவங்க ஒரு ப்ளாக் தொடங்கி எழுதலாம். அது சரியா இருக்கா இல்லையா, அது இரண்டாவது. ஒரு எழுத்தாளனுக்கு எழுதுவதற்கு ஒரு வெளி கிடைக்குது, இல்லீங்களா?…]

[…‘இந்த ஊர்லயே எனக்கு ரொம்ப பிடிக்காத பையன் வேணுகோபால் தான்டா,’ அப்படினு சொல்லிட்டு, ‘ரொம்ப பிடித்த பையன் அந்தப் பையன்தான்,’ அப்படின்னு சொன்னாராம்….]

[…பெண்ணை தேவதையாப் பார்க்குற கவிமனம் கண்ணதாசன்கிட்ட இருந்துச்சு. எங்கிட்ட இல்ல. நான் அப்படி நினைக்கல…]

[…ஒரு பெண்- ஆசிரியர், எந்திருச்சு கேட்கிறாங்க, ‘என்னங்க, இவ்வளவு வேகமா எழுதிட்டு, இப்பெல்லாம் நீங்க கதைகளோ நாவல்களோ எழுதறதே இல்லையே. ஏன் எழுதாமப் போயிட்டீங்க’. அதுக்கு என்ன சொல்லலாம், ஏதோ ஒரு பதில் சொல்லலாம். ஜெயகாந்தன் சொன்ன பதில், இன்னும் எனக்கு ஞாபகமாயிருக்கு. ‘நான் எழுதியது எல்லாவற்றையும் நீ படித்துவிட்டாயா? முதலில் நான் எழுதியவற்றைப் படி,’ அப்படீன்னார். இந்த கம்பீரம் இருக்கே, …]

[…காந்தியுடைய சுயசரிதைக்கு வாங்க. அதில கடைசி அத்தியாயம் இருக்கே. விடைபெற்றுக்கொள்கிறேன்னு இருக்கும். அது படிச்சபிறகு இரவெல்லாம் அழுதேன் நான் – ஏன் இப்படி முடியுது அப்படின்னு சொல்லி. 18 வயசுங்க. ஏன்னா அவ்வளவு நேசிச்சு நேசிச்சுப் படிச்சேன்…]

[…இப்ப, நீங்க கேள்வி கேட்கலாம், ‘ஏன் உங்க நுண்வெளி கிரகணங்களே உங்க வாழ்க்கையைச் சார்ந்துதானே எழுதினீங்க?’ உங்க பின்புலம் சார்ந்து எழுதறது வேற. தொழில் சார்ந்து எழுதறது வேற. ஆனா என்ன ஒரு பெரிய வேடிக்கைனா, சொந்த அனுபவங்கள், சொந்த கஷ்ட நஷ்டங்கள் இருக்கில்லைங்களா – இன்னொருத்தருடைய வாழ்க்கையுடைய ஒரு சின்ன கூறு கிடைச்சவுடனே, அந்த வாழ்க்கையை மிகப்பெரிய அளவிலே விரித்துப் பயணப்படுகிறேன். இப்ப ஒரு சிலந்தி, இரை வந்தால், அப்படியே அந்த இரையை நோக்கி, வலையைச் சரசரன்னு பிண்ணிக்கட்டுதில்லீங்களா, அது மாதிரி, …]

[…திருநங்கையைப் பற்றி எழுதுவதைப் பற்றி இப்ப நான் என்ன நினைக்கிறேன்னா, ஒரு திருநங்கையோடு ஒட்டி உறவிருந்திருந்தா இன்னும் நல்லா எழுதியிருப்பேனோ? நட்பாத்தான் சொல்றேன். ஒரு படைப்பாளியா, ஒரு திருநங்கையுடைய நட்பு இருந்திருந்தா இன்னும் நல்லாயிருந்திருக்குமோன்னு தோணுது. ஆனால், எனக்கு திருநங்கைகளை ஒரு எல்லைவரை பார்க்கக்கூடிய வாய்ப்பு இருந்தது…]

[…வேணாம்னு சொல்றேன். இலக்கியம்னா உங்களுக்கு அந்தத் திறமை இருக்குது. இந்த இடத்தை அடைங்கன்னு சொல்றேன். இவங்க காமத்தக் கையாள்ற விதம் இலக்கியமா இல்ல. எந்த லாஜிக்கும் இல்ல. படைப்பாளி நெனச்சா அந்தப் பெண் கதாப்பாத்திரம் படுக்குறா. நெனைச்சா சிரிப்பா இருக்கு. இவங்க பெண்ணப் புரிஞ்சுகிட்ட விதம்…]

[…ஆனால், எனக்கு தமிழ் இலக்கியத்தினுடைய எந்த பாதிப்பும் இல்லாமல் போச்சுங்கிறதுதான் நீங்க என்னைப் படிக்கிற போது பார்க்கவேண்டியிருக்கு. சிலப்பதிகாரம் படிச்சிருக்கேன். கம்ப ராமாயணம் படிச்சிருக்கேன். சங்க இலக்கியம் படிச்சிருக்கேன். நீங்க யோசிச்சுப் பார்த்தீங்கன்னா, எந்த பாதிப்புமே இருக்காது…]

PDF –

https://padhakai.files.wordpress.com/2015/09/padhaakai-sep2.pdf

 septwo1

தொடர்பு கொள்ள-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.