பதாகை26 ஜனவரி 2015

இந்த வாரம் பதாகை இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. எழுதியவர்களுக்கும் வாசித்தவர்களுக்கும் கருத்து சொன்னவர்களுக்கும் நன்றிகள்.

தமிழ் இலக்கியத்தைப் பிறமொழி இலக்கியத்தோடு இணைத்து வாசிப்பது அன்றாட நிகழ்வாக வேண்டும். அதற்கான முயற்சிகளில் பதாகை இவ்வாண்டு கவனம் செலுத்தும். எனவே தமிழுக்கு அப்பால் தேடும் நிலையில் இருக்கிறோம். தமிழ் இலக்கியம் குறித்து ஆங்கிலத்தில் எழுதுபவர்கள் editor@padhaakai.com என்ற மின்அஞ்சல் முகவரியிலோ, @padhaakai என்ற டிவிட்டர் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம். பிற இந்திய மொழிகளில் எழுதப்பட்டவை குறித்த ஆங்கில கட்டுரைகளைப் பரிந்துரைப்பவர்களும் மேற்கண்ட முகவரிகளில் தகவல் அளிக்கலாம்.

தன் கோபால் முகர்ஜி எழுதிய Gay-Neck, the Story of a Pigeon என்ற நாவல் 1928ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெளிவந்து சிறந்த குழந்தை இலக்கியத்துக்கான பரிசு பெற்றது. சொல்லப்போனால், ஆங்கில மொழி புனைவெழுத்தாளர்களில் பெரிய அளவில் கவனம் பெற்ற முதல் இந்தியர் இவர் என்று சொல்லலாம். படிப்பதற்கு இன்றும் சுவையான கதையாக இருக்கும் இவரது நாவலை மாயக்கூத்தன் மொழிபெயர்க்கிறார். வண்ணக்கழுத்து, முதல் அத்தியாயம் இங்கே.

இன்று ஆங்கில மொழியில் எழுதுபவர்களில் அடில் ஜுஸ்ஸாவாலா முக்கியமான ஒரு கவிஞர். இவரது, “Trying to Say Goodbye” என்ற கவிதை தொகுப்புக்கு இவ்வாண்டு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டிருக்கிறது. ஜுஸ்ஸாவாலா எழுதி அண்மையில் வெளிவந்த கட்டுரைத் தொகுப்பையொட்டி காரவன் பத்திரிகையில் அர்விந்த் கிருஷ்ண மேஹ்ரோத்ரா எழுதிய கட்டுரையை பதாகை மூன்று பகுதிகளாக மொழிபெயர்த்து பதிப்பிக்க இருக்கிறது. முதல் பகுதி இங்கே.

கட்டுரையுடன் அவரது சில கவிதைகளின் தமிழாக்கங்களும் இடுகையிடப்படுகின்றன. நம்பி கிருஷ்ணன் மொழிபெயர்த்த அவளது புகலிடம் என்ற கவிதை இங்கே, செந்தில்நாதன் தமிழாக்கத்தில் களிமண் இங்கே. நண்பர்கள் editor@padhaakai.com என்ற முகவரிக்கு ஜுஸ்ஸாவாலாவின் பிற கவிதைகளை மொழிபெயர்த்து அனுப்பலாம் – ஒரு கவிதை அனுப்பினால் போதும்.

பாகிஸ்தானிய எழுத்தாளர் மன்ட்டோவுக்கு அறிமுகம் தேவையில்லை. ஆனால் ஒருவரை எவ்வளவு நன்றாக அறிந்திருந்தாலும் புதிய பரிமாணங்களைப் பேச முடிகிறது என்பதுதான் இலக்கியத்தின் சுவாரசியம். மன்ட்டோவையும் அவரை வாசித்தேயிருக்க முடியாத ஜி நாகராஜனையும் ஒப்பிட்டு ஒரு சிறு கட்டுரை எழுதியிருக்கிறார் கணேஷ்- மண்ட்டோவும் ஜி நாகராஜனும் – ஒரு பார்வை

புதிதாய்ப் பிறந்திருக்கும் ‘தமிழ்’ மின்னிதழை அறிமுகப்படுத்தும்போது, பதாகை ஒரு குறிப்பிடத்தக்க இணைய இதழ் என்று எழுதியிருந்தார் எழுத்தாளர் ஜெயமோகன், நன்றிகள். அந்தப் பரிந்துரையால் பதாகையை அறிமுகப்படுத்திக் கொண்ட மோனிகா மாறன், “செம்பக வனம்” என்ற சிறுகதையையும், அந்தியின் செவ்வொளி என்ற கவிதையை ஜீவானந்தமும் எழுதியிருக்கிறார்கள். இவர்கள் தவிர ஸ்ரீதர் நாராயணனின் விரல் கணக்கு என்ற கவிதையும், அதிகாரநந்தியின் இந்தக் கரிய இருள் என்ற sonnet வடிவ கவிதையும் இந்த இதழில் இடம் பெறுகின்றன.

பெருமாள் முருகன் விவகாரத்தை முன்வைத்து கருத்துச் சுதந்திரம் குறித்து ஒரு விரிவான, ஆழமான, காத்திரமான கட்டுரையை ஸ்ரீதர் நாராயணன் எழுதியிருக்கிறார். தனியாக வாசித்தாலும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஒரு கவிதையுடன் துவங்கும் கட்டுரை, எஞ்சிய சாம்பலிலிருந்து…, இங்கிருக்கிறது.

தனக்கென்று ஒரு பாதையைத் தேடிக் கொண்டிருப்பவர் சிகந்தர்வாசி. இந்த இதழில் இடம் பெறும் டிபென்ஸ் காலனி பூங்காச் சம்பவம் என்ற குறுங்கதை அவரது வெற்றிகளில் ஒன்று என்று நினைக்கிறேன்.

உங்க படைப்புகளையும் கருத்துகளையும் editor@padhaakai.com என்ற முகவரிக்கு எழுதி அனுப்புங்க, வாழ்த்துகள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.