பதாகை 22 ஜூன் 2015

இவ்வார பதாகையில் குறிப்பிட்ட முக்கியத்துவம் கொண்ட கட்டுரை, ஆர் அஜய்யின் “ஆலிஸ் மன்றோவை வாசித்தல் – 1- Runaway கதைத் தொகுப்பை முன்வைத்து“. ஆலிஸ் மன்றோ தன் சிறுகதைகள்/ நெடுங்கதைகளில் நாவலுக்குரிய அனுபவத்தை அளிக்கிறார் என்று கூறும் அஜய், “சிறுகதை என்பதில் ஒரு உச்சகட்ட நிகழ்வு/ தரிசனம் என்பது அதன் முழுமைக்கு முக்கியம், அதுவே கச்சிதமான முடிவு என்பதை இல்லாமல் செய்து விடுகிறார்,” என்று சொல்வது சிறுகதை வடிவம் குறித்து நம்மைச் சிந்திக்க வைப்பது. அவசியம் படித்துப் பாருங்கள்.

பதாகை அனைத்து வகை எழுத்துக்கும் இடம் கொடுக்க முயற்சி செய்கிறது. மித்யாவின் அமேஸான் காடுகளிலிருந்து- 3 : நிசப்தம் என்ற தொடர்கதை அதற்கொரு நல்ல உதாரணம். இவ்வாரம் இரு கொலைகள் விழுகின்றன என்பது தவிர, “நமக்குள் காடு இறங்கி பல வருடங்கள் ஆகிவிட்டன,” என்று சொல்லி ஜெப்ரி இலண்டனில் சாகசக்காரனுக்குக் காத்திருக்கும் வாழ்க்கையைக் கூறுமிடம் கல்லும் கரையும்- அல்லது, கரைந்தாக வேண்டும், படித்தபின் சொல்லுங்கள்.

பிரான்சின் கொலைக்களங்களில் வேவு பார்க்கப் போன சாகசப்புறா வண்ணக்கழுத்து உளவுக் குறிப்பைக் கொண்டு வந்து சேர்த்த கதையைக் கூறுகிறான் இவ்வாரம், “வண்ணக்கழுத்து 15: சேதி கொண்டு போன கதை“. குண்டுமழை பொழிந்தபடி விரட்டி வரும் விமானத்துக்கு போக்கு காட்டி வண்ணக்கழுத்து தன் உயிரையும் பணயம் வைத்து சேதி கொண்டு சேர்த்த கதை பரபரப்பானது மட்டுமல்ல, போர்க்காட்சியைக் கண்முன் சித்தரித்து நம் தோளோடு வண்ணக்கழுத்து சிறகடித்துப் பறப்பது போன்ற அனுபவத்தை அளிக்கிறது. படிக்கத் தவறாதீர்கள்.

இவை தவிர இவ்வார கவிதைகளில் இரண்டு தமிழாக்கங்கள்- ஹிந்தி மொழி கவிஞர் சூர்யகாந்த் திரிபாதி, ‘நிராலா’ வின் கவிதையை விக்ரம் சேத் ஆங்கிலத்தில்  மொழிபெயர்க்க, அதனை தமிழாக்கம் செய்திருக்கிறார் செந்தில் நாதன்- அடிக்கட்டை எளிய, ஆனால் அழகிய படிமக் கவிதை. இவ்விதழின் மற்றொரு கவிதையான அருண் கொலாட்கரின், கந்தோபாவின் சூதன் (அல்லது) வாக்கியாவின் பாடல் காஸ்மிக் தூசியின் மொழிபெயர்ப்பில் தன் கேலிக் குரலைத் தக்க வைத்துக் கொள்கிறது என்றால் காட்டம் சற்றே அதிகம்தான்.

இறுதியாக, தனிமையின் பாடகன் சோழகக்கொண்டல் கவிதைகளில் இவ்வாரம், தனிமையின் தேநீர் விருந்து. கவிஞர் அருந்துவது தேநீரா கண்ணீரா என்று தெரியவில்லை- சீனாவில் கசப்பை உண்டு இனிப்பைச் சுவை  என்றொரு பழமொழி இருப்பதாகக் கேள்வி. சோழக்கொண்டல் கவிதைகள் கசப்பில் இனிப்பு கரைந்த கலவை. இவ்வார தேநீர் அதன் இன்னொரு சான்று.

பதாகையின் சிறுகதை போட்டிக்காக, வாசகர்கள் தங்கள் படைப்புகளில் சிறந்தவற்றை அளித்து, பங்கேற்கும்படி கேட்டுக் கொள்கிறோம் – —

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.