பதாகை 8 ஜூன் 2015

தொன்மமாதலின் நவீன வடிவங்களைத் தன் படைப்பூக்கப் பார்வை சார்ந்து மித்யா- தன் பெயருக்கேற்ற வகையில்- கடந்த சில வாரங்களாக அணுகி ஆய்ந்து வருகிறார். இவ்வாரம், “அமேஸான் காடுகளிலிருந்து…” என்ற தொடர் துவங்குகிறது- “மூன்று நிமிடத்திற்குப் பின் காடு நிசப்தமானது. புலியின் எலும்புக்கூடு தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது.”

தொன்மங்களை மென்சிரிப்புடன் அருண் கொலாட்கர் தன் கவிதைகளை விசாரிப்பதைப் பார்க்கலாம்- அவரது நகைப்பு நம்பகத்தன்மையற்ற தொன்மங்களைக் காட்டிலும் தொன்மங்களுக்கான தேவையிலிருக்கும் மனித மனதை நோக்கியே இருக்கிறது. இவ்வாரம் காஸ்மிக் தூசி மொழிபெயர்ப்பில், சுரண்டல்- “கடவுள் தவிர/ வேறெதுவும்/ பயிராவதும் இல்லை/ இங்கு/ இருபத்திநாலு மணி நேரமும்

பெண்ணியம் புதிய தொன்மங்களைக் கட்டமைக்கிறதா?  புதுமைப் பெண்களைச் சிறையிடும் நவீன ஆதர்சங்களை விமரிசிக்கிறார் கில்லியன் ப்ளின் –  “பெண்களின் அழகற்ற முகத்தை ஏற்றுக் கொள்ளும் நேரம் எப்போதுதான் வரப்போகிறது? துணிச்சலான நாயகிகள், கற்பழிக்கப்பட்டபின் போராடும் வீராங்கனைகள், ஆன்ம சோதனை செய்து கொள்ளும் உயர்குடிப் பெண்கள் எத்தனை எத்தனை புத்தகங்களை நிறைத்துக் கொண்டிருக்கிறார்கள்- எனக்கு இதெல்லாம் மிகவும் அலுத்துப் போய்விட்டது.” நல்ல பெண்மணி மிக நல்ல பெண்மணி என்ற நவகானத்தைச் செவிக்க மறுக்கும்  நான் நல்ல பெண்ணாக இருக்கவில்லை என்ற அவரது கட்டுரை வாசிக்க வேண்டிய ஒன்று.

பெண்களைப் பற்றி அப்படி என்னதான் மோசமாக எழுதிவிட்டார் கில்லியன் ப்ளின் என்பதை அறிய அஜய்யின் கட்டுரை உதவக்கூடும் – “குடும்ப அமைப்பின் இருண்மையை விவரிக்கும் எழுத்தின் எழுச்சி / THE Rise of Domestic Noir – கில்லியன் ப்ளின்” தலைப்புதான் படுபயங்கரமாக இருக்கிறதே தவிர, கட்டுரை சுவாரசியமானது, பல புதிய தகவல்கள் கொண்டது. இதைப் படிக்காமல் விட்டுவிடாதீர்கள்.

கில்லியன் ப்ளின்னின் குடும்ப நாவல்கள் பரபரப்பான கதையமைப்பைக் கொண்டிருந்தால், தீவிர பார்வை கொண்ட குடும்ப நாவல்களைப் படைக்கும் இலக்கியவாதிகளும் இருக்கின்றனர். வேலைக்குப் போய்க் கொண்டு, குடும்ப அமைப்பில் உள்ள பெண்களின் இலக்கிய பங்களிப்பின் தன்மையை விரிவாய்ப் பேசும் புக் ஃபாரம் கட்டுரை ஒன்றின் சிறு பகுதி தாய் எழுத்து என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  “பெண்கள் கலைத்துறையில் பூதாகரமான ஆகிருதி அடைவதேயில்லை, ஏனெனில் கலை பூதங்கள் கலை குறித்து மட்டுமே கவலைப்படுகின்றன, அன்றாட விவகாரங்களைப் பற்றியல்ல. நபகோவ் தன் குடையைக்கூட மடித்ததில்லை. தபால் தலைகளை அவருக்கு வேரா எச்சில்படுத்திக் கொடுத்தாள்,” என்பது நியாயமான ஆதங்கமே.

 “ஓட்டிலி என்ற பெயர் எனக்குப் பிடித்திருந்ததால் அதை வைத்துக் கொண்டேன். காப்காவின் சகோதரிகளில் ஒருத்தியின் பெயர் அது- ஹங்கேரிய மொழியில் ஓட் என்றால் அங்கே என்று பொருள், நான் எப்போதும் அங்கிருப்பவள், இங்கல்ல, எனபதையும் அது குறிக்கிறது என்று நினைத்துக் கொள்கிறேன்…“- மொழியார்வம் உள்ள அனைவரும் வாசிக்க வேண்டிய பேட்டி – ஹங்கேரிய மொழி இலக்கியத்தை இந்திய ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம்- பாரிஸ் ரிவ்யூ தளத்தில் ஒரு நேர்முகம்

கடைசியாகச் சொல்வதால் முக்கியமற்றது என்றாகாது. குழந்தை இலக்கிய தமிழாக்கத்தின் ஒரு மாஸ்டர்பீஸாக வளர்ந்து வரும் வண்ணக்கழுத்து கதையின் பதின்மூன்றாம் பகுதி இங்கு.

சிறுகதைகளுக்கான முக்கியமான விருதுகளில் ஒன்றின் தேர்வுப்பட்டியலில் அலேஜாண்ட்ரோ ஜாம்ப்ரா இடம் பெற்றிருக்கிறார் என்பது இவ்வாரச் செய்தி.  இவரது எழுத்தின் சிறு பகுதி பதாகையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது- வீடு திரும்பும் வழிகள். தொடர்ந்து உலக இலக்கியப் படைப்புகளை அறிமுகப்படுத்தி வரும் பணிக்கான உங்கள் ஆதரவிற்கு பதாகை நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

பதாகையின் சிறுகதை போட்டிக்காக, வாசகர்கள் தங்கள் படைப்புகளில் சிறந்தவற்றை அளித்து, பங்கேற்கும்படி கேட்டுக் கொள்கிறோம் – —

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.