பதாகை 02 மார்ச் 2015

பதாகைக் கவிதைகளில் பூனைகள் வந்து பல வாரங்களாகிறது. வேணுகோபால் தயாநிதியின் ‘பூனைக்குட்டி’. வரலாற்றை நோக்கி பின்நவீனத்துவ பார்வை பார்க்கிறார் சோழகக்கொண்டல்- “அதன் மூக்குக்கயிறு முன்னால் மட்டுமே இழுபடக்கூடியதல்லவா?​”​, என்ற கேள்வி குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டுமென்றாலும், விவாதத்துக்கு உரியது.

இந்த வாரமும் அருண் கொலாட்கரின் கவிதையை காஸ்மிக் தூசி மொழிபெயர்த்திருக்கிறார். குதிரைலாட கோவில், வாசகர்களுக்கு ஒரு சவாலாக இருக்கப்போகிறது. அருண் கொலாட்கரை மொத்தமாகப் படிக்க விழைபவர்கள் சவாலை வெல்லக்கூடும். குழந்தைமை ஒரு வரம். யாருக்கு? அப்பாவிற்குத்தான் என்கிறார் ஸ்ரீதர் நாராயணன். எத்தனை எத்தனை குதூகலங்கள், அவருடைய இந்த வாரக் கவிதை கிலுகிலுப்பை.

சம்பவ ஸ்பெஷலிஸ்ட் சிக்கந்தர்வாசி எழுதியிருக்கும் கதை தொலைந்த துணை. அவருடைய பரிசோதனை முயற்சிகள் தொடர்ந்து மனிதர்களின் வெவ்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்திவருகின்றன.

வண்ணக்கழுத்தின் இந்த வார அத்தியாயத்தில், அவனைத் தேடிப் போகும் சாக்கில் காட்டையும் இயற்கையையும் பற்றி நமக்கு நிறைய அறியத் தருகிறார் தன் கோபால் முகர்ஜி.

இந்த வாரம் இரண்டு கட்டுரைகள். தர்க்கங்களோடு சிந்தனைகள் இணைந்து போகையில் எழுத்தின் சாத்தியங்களுக்கு குறைவில்லை. வெ.கணேஷ் எழுதியிருக்கும்  ரஷமோன் – மாறுபாடுகளும் ஒற்றுமையும், திரைப்படத்தை புதிய கேள்விகள் கொண்டு பொலிவிட்டு வேறொரு கோணத்தில் மனிதத்தன்மையை அறியத் தருகிறது. சரி, தவறு என்பததைத் தாண்டி எல்லாவற்றிலும் உண்மை இல்லாமல் இல்லை.

ஆஸ்கார் 2015. இவ்வருட ஆஸ்கார் விருதுகள் வாங்கிய திரைப்படங்களை கோடிட்டுக் காட்டும் கட்டுரை. பாஸ்டன் பாலா, ஆஸ்கார் விருதுகளை எட்டி உதைக்கும் இடங்களை நாம் ஏற்றுக் கொள்கிறோமோ இல்லையோ, நாம் அறிந்து கொள்ள நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்கிறார்.

நண்பர்கள் தங்கள் கருத்துகளையும் படைப்புகளையும் editor@padhaakai.com என்ற முகவரிக்கு அனுப்பலாம், அல்லது கீழுள்ள படிவத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s