பதாகை 16 பிப்ரவரி 2015

பலமுறை வாசிக்க முடியாத புத்தகத்தை ஒருமுறை வாசிப்பதும் வீண் என்று ஒரு மேற்கோள் உண்டு. பல படைப்புகள் வாசிக்கப்பட்டபோதும், மீள்வாசிப்புகளே இலக்கிய உருக்கொள்கின்றன. சில ஆங்கில மொழி கதைகளை நாம் முற்றிலும் எதிர்பார்த்திருக்க முடியாத ஒரு மீள்வாசிப்புக்கு உட்படுத்துகிறார் அஜய், “நவீன தேவதைக் கதைகள் சில” –

ஒரு சம்பவம் எப்போது கதையாகிறது என்பது என்றும் சுவையான கேள்வி. சென்ற இதழில் சிகந்தர்வாசி எழுதிய ஹௌடாச் சம்பவத்தைத் தொட்டு, இவ்வாரம், நகுல்வசன் வழியனுப்புதல் என்ற சிறுகதையை எழுதியிருக்கிறார் .

ஆனால் அதற்காக, சம்பவங்கள் தொடராமல் இல்லை. சிறப்பாக எழுதப்பட்டால், முன்கதை, பின்கதை, சூழல் மற்றும் பாத்திரங்கள் குறித்த உணர்த்துதல் என்று எதுவும் இல்லாத போதும், சம்பவங்கள் வாழ்வனுபவங்களின் பிரதிபிம்பங்களாக இருப்பது மட்டுமல்ல, அவற்றின் புதிர்த்தன்மையையும் சுவீகரித்துக் கொள்ள இயலும். சிகந்தர்வாசியின், “புது தில்லியில் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு சம்பவம்“,  அத்தகைய ஒரு முயற்சி.

இயற்கையின் நிகழ்வுகளுக்கு எல்லையே இல்லை என்பது போல மனித நம்பிக்கைகளுக்கும் எல்லையே இல்லை. இந்த இரண்டுக்கும் இடையேயான சுவாரஸ்யமான விளையாட்டை கணிக்க முடியாது. இதைச் சொல்லும் எளிய, ஆனால் சுவையான கதை, ஹரன் பிரசன்னாவின் சோழி.

அருண் கொலாட்கரின் சில கவிதைகளைத் தொடர்ந்து தமிழாக்கம் செய்து வரும் காஸ்மிக் தூசி, இவ்வாரம், “யஷ்வந்த் ராவ்” என்ற சற்றே நெடுங்கவிதையை மொழிபெயர்த்துள்ளார். வாசிக்க சுவாரசியமான, விளையாட்டுத்தனம் பொருந்திய கவிதை.

விளையாட்டுத்தனம் கொண்ட இன்னொரு கவிதை, எஸ் சுரேஷ் எழுதியது- “குங்-பூ கற்றுக்கொள்ள சீனா சென்றபொழுது” . கவிஞர், சித்தர்கள் போல் தினமும் ககன மார்க்கமாக சீனா சென்று வருகிறாரா என்ன என்று கேட்டிருக்கிறோம்.

சொல்வனம் இணைய இணைய இதழில் தொடர்ந்து எழுதி வரும் கவிஞர் வேணுகோபால் தயாநிதி, முதல்முறையாக பதாகையில், பிரபஞ்ச விளையாட்டு  என்று ஒரு கவிதை எழுதியுள்ளார்.

இதற்கு சுவாரசியமான இணை போல் ஸ்ரீதர் நாராயணன், விளையாட்டாய் உருவாகும் பிரபஞ்சங்களைக் குறித்து ஒரு அழகிய கவிதை எழுதியிருக்கிறார்- ஆரஞ்சு வண்ணம்

என்னவோ தெரியவில்லை, இந்த இதழில் விளையாட்டாய் எல்லாம் அமைந்து விட்டது. ஆனால், குழந்தைகளுக்கான கதை, வண்ணக்கழுத்து, இவ்வாரம் மிக அழகிய, உணர்வெழுச்சி மிக்க இமாலய தரிசனம் அளிக்கிறது, வாசிக்கத் தவற வேண்டாம்- வண்ணக்கழுத்து 4 (அ): இமாலயம்

பதாகை நண்பர்கள் தங்கள் கருத்துகளையும் படைப்புகளையும் editor@padhaakai.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். அல்லது, இந்த படிவத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s