பதாகை 23 பிப்ரவரி 2015

இந்த வாரத்தின் சிறப்புப் படைப்பு என்று வண்ணக்கழுத்து தொடரைதான் சொல்ல வேண்டும். குட்டிப்புறா வண்ணக்கழுத்தும் அதை வேட்டையாடும் கழுகின் குஞ்சுகளும் தாயை இழந்து சுதந்தரத்தைக் கண்டு கொள்கிறார்கள். இமயம் ஓர் உயிர்த்திரளாய் இந்த அத்தியாயத்தில் நம் முன் உயர்ந்து நிற்கிறது.

கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பதாகையில் எழுதி வரும் ஹரன் பிரசன்னா, இவ்வாரம், சுழல் என்ற சிறுகதை எழுதியிருக்கிறார். தாமிரபரணி என்று தலைப்பு வைத்திருக்கலாம் என்பதற்கு மேல் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. நெல்லையின் இன்னுமொரு நட்சத்திரம் என்று இந்தக் கதையைப் படித்தபின் நீங்கள் சொல்வீர்கள் 🙂

வெகு நாட்களுக்குப்பின் சத்யராஜ்குமார், காலண்டர் என்ற சிறுகதை எழுதியிருக்கிறார். தகவல்களையும் உணர்வுகளையும் சமநிலையில் வைத்துப் பார்க்க முடியுமா என்று யோசிக்க வைக்கும் கதை.

சம்பவங்களின் வரிசையில் இம்முறை ஸ்ரீதர் நாராயணன் ஏபிஎன் பெட்டிக்கடை சம்பவம்  எழுதியிருக்கிறார். பதைபதைக்கச் செய்யும் ஓர் அதிர்ச்சிச் சம்பவத்தை விவரிக்கும் சிறுகதை இது.

“இல்லாத ஒருவனுக்கு இன்மையை ஈந்து செல்கிறேன்,” என்று இவ்வாரம் போர்ஹெஸ் கவிதையில் மொழிபெயர்த்திருக்கிறார் செந்தில்நாதன். தற்கொலை, படிக்க வேண்டிய கவிதை. இவ்விதழின் மற்றொரு மொழிபெயர்ப்பு, அருண் கொலாட்கர் கவிதைகளைத் தொடர்ந்து தமிழாக்கம் செய்து வரும் காஸ்மிக் தூசி செய்தது- பேருந்து, இதில் அவர் ஒவ்வொரு சொல்லையும் தேர்ந்தெடுத்து எழுதியிருப்பது தெரிகிறது.

நந்தா குமாரனின் ஏணியில் ஏறும் ரயில், மற்றும் ஆதவன் கிருஷ்ணாவின் மலை பதுங்கும் களிறுகள்  நவீன கவிதையின் இரு புதிய படைப்புகளைப் பதாகை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றன. எஸ் சுரேஷ், வீடு தேடி வந்த யானையில் தன் விளையாட்டுத்தனத்தைத் தொடர்கிறார். ஸ்ரீதர் நாராயணன் சில வாரங்களாக குழந்தைமையைப் பாடி வருகிறார். இவ்வாரம், கனவு மெய்ப்படுதல்,  இன்னுமொரு அழகிய கவிதை.

நண்பர்கள் தங்கள் கருத்துகளையும் படைப்புகளையும் editor@padhaakai.com என்ற முகவரிக்கு அனுப்பலாம், அல்லது கீழுள்ள படிவத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s