பதாகை 20 ஏப்ரல் 2015

இவ்வார பதாகையில், வண்ணக்கழுத்தின் போர்ப்பயிற்சி, குறிப்பிடத்தக்க சுவாரஸ்யம் கொண்டதாக இருக்கிறது. கதைப்போக்கில் திடீர் திருப்பமாக போர் மேகங்கள் சூழவும், வண்ணக்கழுத்துக்கு போர்ப்பயிற்சி அளிக்கப்படுவதும் சற்றே வலிந்து திணிக்கப்பட்டதாக இருப்பினும், இயற்கை வர்ணனைகளும் விசித்திர பழக்க வழக்கங்களும் ஒவ்வொரு அத்தியாயத்தையும் வாசிக்க வைக்கின்றன. இதோ தொடரின் ஒன்பதாம் அத்தியாயம் – வண்ணக்கழுத்தின் போர்ப்பயிற்சி 

உண்மையின் பன்முகத்தன்மை பேசிப் பேசி உலர்ந்துவிட்ட விஷயம் என்பதால் அதைப் பேசாமல் இருக்க முடியாது. வெவ்வேறு வடிவங்களில் அதைப் புதுசுபோல் பேசியாக வேண்டும். இந்த விஷயத்துக்குப் பொருத்தமான பெயர் கொண்ட நண்பர் மித்யா, சென்ற வாரம், சம்பவம் நடந்ததா?- உண்மையைத் தேடும் புதுமை நாவல் விமர்சனம் எழுதினார் .இவ்வாரம் இன்னொரு விமர்சனம் எழுதுகிறார் – மோன்-ரோஷ் : சினிமாவின் பன்முகத்தன்மை

கவிதைகள் வரிசையில், அருண் கொலாட்கர் கவிதைகளைத் தொடர்ந்து மொழிபெயர்த்துவரும் காஸ்மிக் தூசியின், தாழ்வான கோயில் இங்கிருக்கிறது. சோழகக்கொண்டலின் கண்ணாடிச் சாளரம் வாழ்வின் வண்ணங்களை அதன் மாயம் கெடாத புதிர்த்தன்மையுடன் விரித்துக் காட்டுகிறது. அதிகாரநந்தியின் உய்வித்தல், யாரை யார் உய்விக்கிறார்கள் என்ற நியாயமான கேள்வி எழுப்புகிறது.  பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தியின் இறுதிச்சுற்று நிலவரப்படி அதன் எளிய பொருளுக்கு ஏற்ற எளிய வடிவம் கொண்டிருக்கிறது – இவையனைத்துக்கும் நடுவில் பாப்லோ நெருடாவின் எப்போதும் என்ற கவிதை தனித்து நிற்கிறது என்பதில் குறையொன்றுமில்லை.

சிறுகதைகளின் முடிவுகள் குறித்து டி சி பாய்ல், கார்வரின் கதீட்ரல் என்ற சிறுகதையை முன்வைத்து எழுதியுள்ள குறிப்பு கவனிக்கத்தக்கது, படித்துப் பாருங்கள்.

பதாகையைத் தொடர்பு கொள்ள நண்பர்கள் கீழுள்ள படிவத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s