பதாகை 6 ஏப்ரல் 2015

ஒரு வார இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் வண்ணக்கழுத்து தன் கதையை சொல்ல வந்துவிட்டான். உழவாரக் குருவிகளைப் பற்றி, அவற்றின் குறைபாடுகளைப் பற்றி, அதை எப்படி அவை ஈடு செய்கின்றன என்பதைப் பற்றி, அதன் குஞ்சுகளை பருந்தின் தாக்குதலிலிருந்து அவன் காப்பாற்றிய சாகசங்களை பற்றியெல்லாம் சுவாரசியமாக போகிறது இவ்வார அத்தியாயம். வெட்டவெளியில் இரவை செலவழிக்கப் போகும் வண்ணக்கழுத்தின் தைரியம் வேறென்ன ஆபத்தை வரவழைக்கப் போகிறதோ.

உளக்காட்சிகளை வெளிப்படுத்தும் சொற்தேர்வுகளில் தனித்துவ பாணியை கொண்ட கவிதைகளை எழுதிவரும் சோழக்கொண்டல் இவ்வாரம், தன்னிடமிருந்து தனிமையை யார் மீட்டுத்தந்தாலும் எஞ்சுவது தனிமைதான் என்பதை தவிப்போடு சொல்கிறார்.

கொலாட்கரின் கவிதை தொகுப்பில் ஒரு சீர்மை காணப்படுவதாக சொல்வார்கள். காஸ்மிக் தூசி தன்னுடைய மொழியாக்கங்களில் கொலாட்கர் கண்ட ஜேஜுரியை அதே கண்களோடு நம் முன்னே கொண்டு வந்துவிடுகிறார். இவ்வார ‘கதவு’ கவிதை மிக சிறப்பாக அமைந்திருக்கிறது.

தனக்குள் உயிர்த்து பிரசவித்த மற்றொரு உயிரின் பொருட்டு தன்னை பலியாக்கிக் கொள்ளக் கூடாது என்று போராடும் பெண் மனத்தை முன்வைத்து இவ்வார கவியின்கண் கட்டுரையில் எஸ். சுரேஷ் எழுதுகிறார். தன்னை வெள்ளமாக நிறைக்கும் விநயத்தைப் பற்றி கவிஞர் அன்னா ஸ்விர் சொல்லும் தருணம் நம்மையும் வெள்ளமாக அடித்து செல்கிறது.

20150404– விக்டர் லிங்கனின் ஒளிப்படம் உங்களுக்கு மாறுபட்ட அனுபவத்தை அளிக்க வல்லது. தொடர்பற்ற சங்கதிகளில் இருக்கும் தொடர்பிருப்பதாய் கற்பனை செய்துகொள்ளும் அர்த்தமற்ற அபத்தத்தை பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி கவிதையாக்குகிறார். முடிவாக தந்த்ரா பென்ஸ்கோவின் சுருள் சுருளாக விரியும் பின்னிரவின் கனவைப் பற்றிய அற்புதமான கவிதையோடு இவ்வார பதாகை நிறைவு பெறுகிறது.

இம்மாத இறுதியில் பதாகை நாஞ்சில் நாடன் சிறப்பிதழ வெளியிடும் முயற்சிகளில் இருக்கிறது. இது குறித்த குறிப்பைப் பகிர்ந்து கொண்ட நாஞ்சில் நாடன் தள நிர்வாகிக்கு நன்றிகள். நண்பர்கள் தங்கள் படைப்புகளை editor@padhaakai.com என்ற மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

கருத்துகள் பகிர-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s