பதாகை ஜூலை 13 2015

அமேசான் காடுகளிடையே இந்தியத் துறவி கதை சொல்லத் தொடங்க, வண்ணக்கழுத்திற்கு இவ்வாரம் விடுமுறை. சிறுவர்களுக்கான கதையை சிறப்பானதொரு ஒலிச்சித்திரமாக உருவாக்க முயற்சிகள் நடந்துகொண்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து வதந்திகள் உலவுகின்றன. அதற்கு மாற்றாக Deb Olin Unferth எழுதிய சிறுகதையை பீட்டர் பொங்கல் தமிழாக்கி தந்திருக்கிறார். நோயில் கொட்டுவாயில் இருப்பவரைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் மரணத்தை உய்த்துப் பார்ப்பது போலிருக்கிறது.

அமெரிக்க சிறுபத்திரிக்கைகள் உலகம் குறித்து அவதானிப்புகள் நிறைய காணப்பட்டாலும், பிற்பகுதியில் அவற்றின் அவசியச் செயல்பாடுகள் குறித்த முக்கியமான கருத்துகள் இடம்பெற்றிருக்கின்றன. அதனால் Stephen Burt-ன் இக்கட்டுரையை மொழியாக்கம் செய்கிறேன் என்கிறார் பீட்டர் பொங்கல்.

சம்பந்தமில்லாத ஏதோ ஓர் உரையாடலை அசுவாரசியமாகவோ கவனிக்கும்போது அதன் விவாத நேர்த்தி நம்மையும் உள்ளிழுத்துக் கொள்வது போல இந்தக் கட்டுரை நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது என்கிறார் பீட்டர் பொங்கல். கொஞ்சம் கனமான சமாச்சாரம் என்றாலும், மொழியாக்கத்தின் இலாகவம் நம்மை சுணங்கவிடுவதில்லை.

பதாகையில் தொடர்ந்து பங்காற்றிவரும் ஆதவன் கிருஷ்ணாவின் இப்பிணம் கவிதை இவ்வாரம் வெளியாகியிருக்கிறது. தீவிர வெயிலில் நிழல்களறற்ற தெருப்புழுதியில் மணல் ஓவியம் வரைந்திருப்பத உணரும்போது இருண்மையின் அழகியல் புரியலாம்.

கொலாட்கரின் ஜெஜூரி தொடரில் அடுத்ததாக ‘A Little Pile of Stones‘ கவிதையை காஸ்மிக் தூசி தமிழாக்கம் செய்திருக்கிறார். வாழ்க்கையின் அனுமானங்களை உருவாக்கிக் கொள்வதில் அடித்தளமாக கலாச்சார தெரிவு முக்கியமென அறிவுறுத்துகிறாரோ. ஜெஜூரி கலாச்சாரத்தின் வளர்சிதை மாற்றங்கள் பற்றி ஒவ்வொரு கவிதையிலும் ஒரு தெறிப்பு தோன்றுகிறது.

ஒவ்வொரு வாரமும் பதாகை இதழ் தொகுப்பை கொண்டு வருவதற்கு அயராது பாடுபடும் பதாகை குழுவினருக்கு, குறிப்பாக செறிவான மொழியாக்கங்களை தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கும் பீட்டர் பொங்கலுக்கு பதாகை வாசகர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.

பதாகையின் சிறுகதை போட்டிக்காக, வாசகர்கள் தங்கள் படைப்புகளில் சிறந்தவற்றை அளித்து, பங்கேற்கும்படி கேட்டுக் கொள்கிறோம் – —

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.