பதாகை ஜூலை 06 2015

உலகளாவிய எழுத்தாளர்கள் அனைவரும் புக்கர் பரிசு பெறத் தகுதி கொண்டவர்கள் என்ற புதிய விதிமுறைகளுக்குப்பின் அப்பரிசு இஸ்மாயில் கதாரேவுக்கு 2005ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. அப்போது Adam Kirsch நியூ யார்க் சன் என்ற பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு இவ்வார பதாகையில்.

நினைவின் பாழ்நிலம்- இஸ்மாயில் கதாரேவின் நாவலை முன்வைத்து அஜய் எழுதுகிறார்.

thegeneralofthedeadarmy-titleஒருவன் சிப்பாயோ, தளபதியோ அல்லது அரசனோ, போர்க்களத்தில் அவன் வீழ்ந்தபின் அவன் உடலை ராணுவத்தில் அவன் படிநிலைக்கேற்ற வகையில் எளிமையாகவோ பிரமாண்டமாகவோ அடக்கம் செய்வது என்பது தொன்றுதொட்டு வரும் ஒரு சடங்கு. ஆனால் வீழ்ந்த வீரனுக்குச் செலுத்தப்படும் மரியாதையில் எந்த பாகுபாடும் இருப்பதில்லை. இறந்த வீரனின் உடலை இழிவுபடுத்துவது என்பது, அவனுக்கு இழைக்கக்கூடிய மிகப் பெரிய அவமரியாதையாக, போர் அறத்தை மீறும் படுபாதகச் செயலாக இன்றும் கருதப்படுகிறது. போரில் வீழ்ந்த அனைத்து வீரர்களின் உடல்களையும் கண்டுபிடிக்க முடியாத யதார்த்தச் சூழலில் “Tomb of the Unknown Soldier” என்றழைக்கப்படும் கூட்டு நினைவுச் சின்னங்கள் பல தேசங்களில் உருவாக்கப்பட்டுள்ளன.

இறுதி நொடிகளைக் காட்சிபடுத்தும் ஆதவன் கிருஷ்ணா கவிதையில் பிச்சைக்காரன் அளிக்கும் மீட்சியை காணலாம். வண்டலாகிப்போன வரலாற்றைப்பற்றி கொலாட்கரின் நீர்தேக்கத்தை காஸ்மிக் தூசி மொழிபெயர்த்திருக்கிறார்.

இவ்வாரம் Exotic பகுதிகளை கண்டுபிடித்து காசு பண்ணும் கார்பொரேட் தந்திரத்தை விவரிக்கும் அமேஸான் காடுகளிலிருந்து தொடரின் பிற்பகுதியில் வித்தியாசமான இந்திய குரு ஒருவர் வருகிறார். சுவாரசியம் ஏறுகிறது.

லிடியா டேவிஸின் இரு குறுங்கதைகளை பீட்டர் பொங்கலின் தமிழாக்கத்தில் வாசிக்கலாம். வெகு சிக்கனமான சொற்களில் அழுத்தமான பதிவுகளை உண்டாக்கும் சின்னஞ்சிறிய கதைகள்.

பதாகையின் சிறுகதை போட்டிக்காக, வாசகர்கள் தங்கள் படைப்புகளில் சிறந்தவற்றை அளித்து, பங்கேற்கும்படி கேட்டுக் கொள்கிறோம் – —

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.