பதாகை 08 மார்ச் 2015

“இலக்கியம் நம் இருப்பை நிறுவும் வழி மட்டுமல்ல, அது நாம் மறையவும் அனுமதிக்கிறது, இல்லாதது போலிருப்பவர்களின் இருப்பையும் அனுமதிக்கிறது” என்கிறார் மியா கோதோ, தன்னுடைய நூஸ்டாட் பரிசு ஏற்புரையில் (இவ்வுலகை மீண்டும் மாயங்களால் நிறைத்தல்).

இல்லாதது போல் இருக்கும் நிலைதான் எப்பேர்பட்ட பேறு. போர்ச்சுகீசிய வம்சாவளியினரவரானாலும், தன்னை ஆப்பிரிக்கராகவும், மொஸாம்பிக்கின் குடிமகனாகவும் அடையாளப்படுத்திக் கொண்டு அதன் தத்தளிக்கும் வரலாற்றை தொடர்ந்து பதிவு செய்து கொண்டு வரும் மியாவின் “காலத்தின் கடைக்கோடியில் தோட்டமும் ஒரு கிழவனும்” என்கிற சிறுகதை இவ்வாரம் இடம்பெற்றிருக்கிறது. பதாகைக்கே உரிய மொழிபெயர்ப்பு நேர்த்தியுடன் வெளிவந்திருக்கிறது. தொடர்ந்து உலக எழுத்தாளர்களையும், அவர்களின் பேட்டிகள் மற்றும் ஆக்கங்களை, தமிழ் வாசிப்புலகத்திற்கு அறிமுகப்படுத்தும் பதாகையின் பணியில் மற்றொரு சுவடு இது. நூஸ்டாட் பரிசு பற்றியும் மியாவைப் பற்றியும் சிறுகுறிப்பு தனியே இடம்பெற்றிருக்கிறது.

மியாவின் சிறுகதையில் வரும் கிழவனைப் போல எலிசெபத் பிஷப்பின் கவிதையும் தொலைத்துக் கொண்டிருப்பவனைப் பற்றி பேசுகிறது. ‘எனக்குரிய சில உலகங்களை தொலைத்தேன், இரு நதிகள், ஒரு கண்டம்…. ஆனாலும் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடவில்லை’ என்று போகிறது கவிதை. இத்துடன் இணையாக இழப்பின் கலையில் தேர்ச்சி அடைவது பற்றி எஸ். சுரேஷ் தன்னுடைய அனுபவங்களை முன்வைத்து கவியின்கண் தொடரில் எழுதுகிறார்.

வண்ணக்கழுத்தை தேடி காட்டுக்குள் நாள் முழுக்க அலைந்து விட்டு, பயங்கரமான காட்டுவிலங்குகள் மத்தியில் ஓரிவைக் கழிக்கும் அனுபவத்தை சுவைபட சொல்கிறது இவ்வாரப் பகுதி. இரையை தவறவிட்ட புலி, மதம் பிடித்த யானை, மானை விழுங்கும் மலைப்பாம்பு என்று மயிர்கூச்செரியும் சம்பவங்களோடு போகிறது. மாறுதலாக, மிருகங்களை முன்வைத்து எழுதும் சுரேஷின் கவிதைகள் வரிசையில் இம்முறை நெருப்புக்கோழி வந்து குதிக்கிறது. இந்த கவித்துவ ஒப்பீடுகளில் ஊடாடும் அபத்த குறும்புகள் ஒரு தனித்துவத்தை அளிக்கின்றன.

சிகந்தர்வாசியின்  500A சம்பவம் வாசித்து முடிக்கும்போது வாசகனின் மனதில் ஒரு சிறுகதைக்கான தொடக்க நுனியை விட்டுச் செல்கிறது. சென்ற வாரங்களில் பதாகையில் வெளிவந்த சம்பவங்களை முன்வைத்து சிறுகதை ஒன்று வெளிவந்திருந்தது. இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக ஏதும் கதை வெளிவருமா எனும் ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது.

மியாவின் படைப்புகள் வெளிவரத் தொடங்கியிருந்த காலத்தில்தான் கொலாட்கரின் கவிதைகளும் பதிப்பிக்கப்பட தொடங்கியிருந்தன. அமித் சௌத்ரியின் கட்டுரைகள் வாயிலாக ஏற்கெனவே பதாகையின் வாசகர்களுக்கு கொலாட்கரின் விரிவான அறிமுகம் உண்டு. காஸ்மிக் தூசி தொடர்ந்து கொலாட்கரை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகபடுத்தும் விழைவாக, ‘The Priest‘ கவிதையை தமிழில் தருகிறார்.

ஒவ்வொரு வாரமும் முனைப்பாக பல்வேறு படைப்பு பரிமாணங்களோடு உங்களை சந்திக்க வருவதில் பதாகை மிகவும் மகிழ்ச்சி கொள்கிறது. உங்களின் ஆதரவும், ஊக்கமும் அன்றி இது சாத்தியமாகி இருக்காது.

நண்பர்கள் தங்கள் கருத்துகளையும் படைப்புகளையும் editor@padhaakai.com என்ற முகவரிக்கு அனுப்பலாம், அல்லது கீழுள்ள படிவத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.