பதாகை 15-மார்ச்-2015

வண்ணக்கழுத்து மீண்டும் காணாமல் போய்விட, அவனைத் தேடிக்கொண்டு செல்பவர்கள், காட்டின் நடுவே தங்குவதைப் பற்றி இவ்வார வண்ணக்கழுத்தில் வருகிறது. “கைநீட்டினால் ஆடையைத் தொட்டுவிடும் அளவு நெருக்கத்தில் வருவது போல அந்த அமைதி இருந்தது” என்று வர்ணிக்கப்படும் இரவு அலாதியானதாக இருக்கிறது.

கூடவே, சோழகக்கொண்டலின் ‘நிகழும் இரவு‘ பற்றிய கவிதை மற்றொரு அலாதியான அனுபவமாக இருக்கிறது. நீண்ட இரவினைக் கொண்டு வாழ்வின் அந்தரங்க அனுபவங்கள் அனைத்தையும் தொட்டு செல்கிறார்.

அந்தரங்கம் என்றால் துணையில்லாமலா என்று தன்னுடைய இன்னுமொரு வாக்கிங் அனுபவத்தை பகிர்கிறார் சிகந்தர்வாசி. துணை என்பது பகிர்தலையும் தாண்டி, பல லௌகீக அபிலாஷைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. அதைப் பற்றிய நல்லதொரு புரிதலுக்கு சிகந்தர்வாசி தன்னுடைய துணைவியாரின் அறிவுரையை கேட்டு நடந்தாலே போதும். ஆனால் அப்புறம் நமக்கு இது போன்ற அனுபவங்கள் கிடைக்காதே.

சில எல்லைகளுக்குள் நம் தேவைகளைக் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்வதைப் பற்றி எஸ். சுரேஷ் தன்னுடைய கவியின்கண் தொடரில் குறிப்பிடுகிறார். ‘இறைச்சிக்கும் ஆகாத நூறுகோடி’ மனிதர்களை யார் வாங்குவார்’ என்று பொட்டில் அறையும் கவிதையை ஒட்டி இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. மலையாளக் கவிஞர் விஜயலக்ஷ்மியின் முழு கவிதையும் மொழிபெயர்ப்பும் இங்கே வாசிக்கலாம்.

கூரையைத் தாங்கும் அனுமாரும், தன் குட்டிகளுடன் வாழும் தெருநாய் ஒன்றும் தன் இருப்பிடமாக ஒரு கோவிலைக் கொள்ள, அதையே கடவுள் குடியிருக்கும் இடமாக கொலாட்கர் காண்கிறார். காஸ்மிக் தூசியின் மொழிபெயர்ப்பில் ‘இடிபாடுகளின் மத்தியில்’. அதற்கு மாறாக அணில்களின் விளையாட்டு பற்றி எஸ். சுரேஷ் எழுதிய கொண்டாட்டமான குறுங்கவிதையும் இடம்பெற்றிருக்கிறது.

நண்பர்கள் தங்கள் கருத்துகளையும் படைப்புகளையும் editor@padhaakai.com என்ற முகவரிக்கு அனுப்பலாம், அல்லது கீழுள்ள படிவத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s