பதாகை 22 மார்ச் 2015

“கவிதை கொலாட்கருக்கு ஒரு ஜோடி இறக்கைகள் தந்திருந்தால், ஜுஸ்ஸாவாலாவுக்கு உரைநடை சைஸ் டென் செருப்புகள் தந்திருக்கிறது. அவரும் கொலாட்கர் எழுதும் விஷயங்களையே எழுதுகிறார், ஆனால் இன்னும் அதிகமாக- ஒரு திசையில் ஏசியாடிக் லைப்ரரிக்கும் மறு திசையில் கொலாபா போஸ்ட் ஆபிசுக்கும் இழுத்துச் செல்கிறார். ” என்ற அர்விந்த் கிருஷ்ணாவின் கட்டுரையின் (மொழியாக்கம்: பீட்டர் பொங்கல்) மற்றொரு பகுதியோடு இந்தவார பதாகை நம்மை வரவேற்கிறது. மும்பை நகரின் திறந்த தெருக்களின் தழும்புகளை ஜுஸ்ஸவாலா, தன் போக்கில் பதிவு செய்திருப்பதை பற்றிய விரிவாக பேசுகிறது கட்டுரை. தொடர்ந்து கொலாட்கரின் சிறிய கவிதையான வாசல்படி காஸ்மிக் தூசியின் மொழியாக்கத்தில் இடம்பெற்றிருக்கிறது. நள்ளிரவின் துருவ ஒளியைப் பற்றி சோழக்கொண்டல் விமரிசையாக சொல்லிப் போகிறார்.

நிலையில்லாத வாழ்க்கையை, விஸ்லவாவின் ‘பயங்கரவாதியின் பார்வையோடு’ ஒப்பிட்டு கவியின்கண் தொடரின் புதிய அத்தியாயத்தை தருகிறார் எஸ். சுரேஷ். வாழ்வதே பெரும் சுமையாகிப் போன வாழ்க்கையை, சாசுவதம் என்ற நம்பிக்கையோடுதான் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. மறைந்து ஒளிரும் முகங்களின் மத்தியில் சிகந்தர்வாசியின் ஏக்கத்தோடு கவிதைகளின் அனுபவம் நிறைவடைகிறது.

வண்ணக்கழுத்து தானே சொல்லும் கதையான இவ்வார பகுதியில், வலிமையான பருந்தோடு வண்ணக்கழுத்து மோதி தப்புவதையும், மீனுக்காக சண்டையிடும் கீஸ் வாத்துகள் பற்றியும் இன்னும் சில சுவாரசியமான விவரிப்புகளையும் அனுபவித்து வாசிக்கலாம்.

வருகிற ஏப்ரல் 26ம் தேதி பதாகை இதழ் ‘நாஞ்சில் நாடன் – சிறப்பிதழாக’ வரவிருக்கிறது. ‘கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது’ என்று தன்னுடைய எழுத்துபணியை வர்ணிக்கும் நாஞ்சில் நாடனைப் பற்றிய படைப்புகளின் அரிய தொகுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  நண்பர்களும், வாசகர்களும் நாஞ்சிலாரின் படைப்புலகம் பற்றிய கட்டுரைகளை  editor@padhaakai.com என்ற முகவரிக்கு அனுப்பி தொகுப்பை செறிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

உங்கள் மேலான கருத்துகளுக்கு.

Image courtesy: அழியாசுடர்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s