பதாகை 30 மார்ச் 2015

இந்த இதழில் சோழகக்கொண்டல் எழுதிய மதுவற்றவனின் இரவுவிடுதி என்ற நீண்ட கவிதையைத் தவிர உள்ள பிறவனைத்தும் மொழிபெயர்ப்புகளே. குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஓசை நயமும் கற்பனை வளமும் கொண்ட கவிதையை எழுதியிருக்கிறார் சோழகக்கொண்டல்.

தொடர்ந்து அருண் கொலாட்கரின் கவிதைகளை மொழிபெயர்த்து வரும் காஸ்மிக் தூசி, இவ்வாரம், நீரடி என்ற கவிதையை எழுதியுள்ளார். கொலாட்கர் கவிதைகளில் ஒரு மெல்லிய நகைச்சுவை அடிநாதமாய் ஒலித்துக் கொண்டிருக்கும். படிமங்களில் நகைச்சுவை வெளிப்படுவது அவரது தனித்தன்மை, இந்தக் கவிதையிலும் அதைக் காண முடிகிறது.

ஜார்ஜ் சாண்டர்ஸ் குறிப்பிடத்தக்க ஆங்கில மொழி எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை வடிவத்தில் மிக முக்கியமான சோதனை முயற்சிகளை மேற்கொள்பவர், அதில் பெரும்பாலும் வெற்றி பெற்றவரும்கூட. இந்த இதழில் அவரது, ஆடம்ஸ் என்ற சிறுகதை இடம் பெறுகிறது.

சென்ற நூற்றாண்டு ஐரோப்பிய இலக்கிய வரலாற்றை எழுதும்போது, அது பெருந்துயரங்களின் வரலாறாக அறியப்படும் சாத்தியங்கள் அதிகம், முதன்மை ஐரோப்பிய இலக்கிய படைப்புகள் பலவும் பேரழிவுகளின் ஆவணங்களாக இருக்கின்றன. இவற்றை எழுதியவர்களில் வரலாம் ஷாலமோவின் குரல் தனித்து நின்று ஒலிப்பது, வழியும் வேதனையும் மிகுந்தது. அவரது கொலிமா கதைகள் என்ற தொகுப்பு குறித்து கார்டியன் தளத்தில் இடுகையிடப்பட்ட கட்டுரையின் மொழிபெயர்ப்பு இது- கலங்கிய நதி- வர்லாம் ஷாலமோவின் கொலிமா கதைகள்

மரியா வர்காஸ் லோசாவுக்கு அறிமுகம் தேவையில்லை. அவரது அண்மைய நாவலையொட்டி டெலகிராப் தளத்தில் ஒரு நேர்முகம் பதிப்பித்திருந்தனர்.  இலக்கியத்தின் சமூக, வரலாற்று தாக்கங்கள் குறித்து சில முக்கியமான கருத்துகளை இதில் பகிர்ந்து கொண்டிருக்கிறார் லோசா.- “இன்று எழுதப்படுவது இலக்கியம் அல்ல, பொழுதுபோக்கு மட்டும்தான் இருக்கிறது”” – மரியோ வர்காஸ் லோசா நேர்முகம்

எந்த ஒரு எழுத்தாளரின் இலக்கிய வாழ்வும் தன் கற்பனை வெளிப்படும் வடிவத்தைக் கண்டு கொள்வதிலும், தன் குரலை அடைவதிலுமே துவங்குகிறது. பென் தளத்தில் டோர்தா நோர்ஸ் எழுதியுள்ள ஒரு சிறு கட்டுரை இதில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறது, அதன் தமிழாக்கம் இது- அகத்துக்கு மிக நெருக்கமான வடிவம். 

அடுத்த மாத இறுதியில் பதாகை நாஞ்சில் நாடன் சிறப்பிதழ வெளியிடும் முயற்சிகளில் இருக்கிறது. இது குறித்த குறிப்பைப் பகிர்ந்து கொண்ட நாஞ்சில் நாடன் தள நிர்வாகிக்கு நன்றிகள். நண்பர்கள் தங்கள் படைப்புகளை editor@padhaakai.com என்ற மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

கருத்துகள் பகிர-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.