பதாகை 11 மே 2015

create-ebook-convert-pdf-1நாஞ்சில் நாடன் சிறப்பிதழாக பரிணமித்த பதாகையின் முதல் காலாண்டிதழ், இப்போது இ-புத்தகமாக வந்திருக்கிறது. இதன் உருவாக்கத்திற்கு அயராமல் பாடுபட்ட வெ. நடராஜனுக்கும், முகப்பு படம் செய்து கொடுத்த நந்துவிற்கும் நன்றி. இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம்.

suvenugopal_flierபதாகையின் இரண்டாம் காலாண்டிதழ், இன்றைய தலைமுறையில் காந்தியத்தின் மீது தீவிர பற்றுகொண்டு ஊடகங்களில் பங்காற்றி வரும் சுநீல் கிருஷ்ணனின் பொறுப்பில், எழுத்தாளர் சு. வேணுகோபால் அவர்களின் சிறப்பிதழாக வெளிவருகிறது. வெண்ணிலை, .நுண்வெளிக்கிரணங்கள், கூந்தப்பனை, களவு போகும் குதிரைகள் போன்ற சிறந்த படைப்புகளை கொடுத்தவரைப் பற்றிய விரிவான நேர்முகம் இடம்பெறவிருக்கிறது. அவருடைய படைப்புலகம் பற்றிய கட்டுரைகள் வாசகர்களிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் வரவேற்கப்படுகின்றன.

shortstorycompetition_teaserபதாகையின் அடுத்த முன்னெடுப்பாக, சிறுகதை போட்டி ஒன்று இடம்பெறவிருக்கிறது. விரிவான அறிவிப்பு விரைவில்.

 

மித்யாவின் விமர்சனங்கள் பதாகை வாசகர்களுக்கு அறிமுகமானவைதான். ஐரோப்பிய கலைச்சூழலை இரண்டாகப் பிரிக்கும் ‘இருத்தலியத்தின் கடைசி மூச்சு‘ படித்துவிட்டு மித்யாவை தொடர்ந்து படிக்க வேண்டுமா இல்லையா என்று இரண்டில் ஒரு கட்சியை நீங்களே தேர்வு செய்து கொள்ளுங்கள்.

வண்ணக்கழுத்தின் சாகச பயணத்தில் இம்முறை அற்புதமான காதல் உணர்வும் இணைந்து கொள்கிறது. பீதியின் எல்லையிலிருந்து வண்ணக்கழுத்து காதலால் மீண்டு எழும் காட்சியை மாயக்கூத்தன் அருமையாக மொழிபெயர்த்திருக்கிறார்.

அருண் கொலாட்கரின் ஜெஜூரி கவிதைத் தொடரில் இவ்வாரம் காஸ்மிக் தூசி சைதன்யாவை மொழியாக்கம் செய்திருக்கிறார். தாகூரின் பிறந்ததினம் முன்னிட்டு கீதாஞ்சலியின் பகுதியை சுபலட்சுமி தமிழில் தந்திருக்கிறார்.

அரிஷ்டநேமியின் பாறைச்சாவி நாம் வலிந்து தொலைத்த தருணங்கள் மீண்டும் நம்மை வந்தடைவதைப் பற்றி சொல்கிறது. சோழக்கொண்டலின் இரட்டை நிகழ்தகவுகளால் அளக்கப்படும் உலகின் படைப்புமொழியை எந்திர மொழியோடு ஒப்பிட்டு நோக்குகிறது.

பதாகை வாசகர்களின் பெரும் ஆதரவு பெற்ற ‘கவியின்கண்’ தொடரில் பெரும்பாலும் இடம்பெற்ற கவிஞர் விஸ்லாவா பற்றி நியூயார்க் டைம்ஸ் தளத்தில் ரிச்சர்ட் லூரி (Richard Lourie) எழுதியுள்ள மதிப்பீட்டின் தமிழாக்கத்தை பீட்டர் பொங்கல் தந்திருக்கிறார்.

தொடர்பு கொள்ள-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.