பதாகை 25 மே 2015

பதாகை தொடர்ந்து உலக இலக்கியப் படைப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது- இவற்றில்   லாஸ்லோ கிராஸ்னஹோர்காய் இவ்வாரம் மேன் புக்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருக்கிறார்; டெபோரா ஐஸன்பெர்க்- “அதிநாயகர்களின் அந்திப்பொழுது-  சிறந்த சிறுகதை எழுத்துக்கான பென்-மாலமுட் விருது பெற்றிருக்கிறார்; வோஹினி வாரா எழுதியுள்ள ஒரு சிறுகதை, 2015 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பொன்றில் இடம் பெற்றிருக்கிறது. நண்பரொருவர் credentialism குறித்து மிகவும் கடுமையாக எச்சரித்திருப்பது நினைவுக்கு வந்தாலும், சமகால உலக இலக்கியத்தின் குருதி சொட்டும் வெட்டுமுனையைப் பதாகை கண்காணித்து வருகிறது என்று பெருமைப்படும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது – கடந்த ஆண்டில் பல மொழிபெயர்ப்பு கட்டுரைகள், உலக இலக்கிய மதிப்பீடுகள் பதாகையில் இடம் பெற்றுள்ளன: அவர்களில் மூவர் ஒரே வாரத்தில் அங்கீகரிக்கப்படும்போது பெருமைப்பட்டுக் கொள்ளாமலிருக்க இயலவில்லை, மன்னித்துக் கொள்ளுங்கள்.

என்றாலும், தொடரும் உலக இலக்கிய  வரிசையில் இவ்வாரம் அமெரிக்க பூர்வகுடி எழுத்தாளரான லூயிஸ் ஏட்ரிக் எழுதியுள்ள The Round House குறித்து அஜய்யின் மதிப்பீடு இடம் பெறுகிறது; இவ்வாண்டு Library of Congress Prize for American Fiction வழங்கப்பட்டு இவர் கௌரவிக்கப்பட்டுள்ளார் என்பது ஒரு உபரி தகவல்- Library of Congress Prize for American Fiction Awarded to Louise Erdrich (கடந்த ஆண்டு இப்பரிசு ஈ எல் டாக்டரோவ்வுக்கும் அதற்கு முந்தைய ஆண்டு டான் டிலில்லோவுக்கும் வழங்கப்பட்டுள்ளமை கவனத்துக்குரிய விஷயம்). பாரிஸ் ரிவ்யூ தளத்தில் இடம்பெற்றுள்ள ஏட்ரிக் நேர்முகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்  மேலதிக அறிமுகம் அளிக்கும் பொருட்டு பதாகையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இந்த இதழில் இடம் பெறும் மற்றுமொரு கட்டுரை, மெய்ம்மைப் பசியும் ஆயத்த நாவல்களும். நம் நிகழ் அனுபவங்கள் ஆவணப்படுத்தப்படும் இலக்கிய வடிவம் குறித்த அக்கறையின் புதிய வெளிப்பாடான ரெடிமேட் நாவல்கள் குறித்த ஒரு சிறிய அறிமுகம் இந்தக் கட்டுரையில் இருக்கிறது.  இது போன்ற ஆக்கங்கள் பதாகையில் அதிகம் இடம்பெறவில்லை எனிலும் நம்பி கிருஷ்ணனின் Erasures கவனிக்கத்தக்கது. வெ. கணேஷ் எழுதிய டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில், எஸ். சுரேஷ் எழுதிய சிருங்கேரி பத்ரா காடுகள் மற்றும் காமாகுரா ஆகிய சிறுகதைகள், மற்றும் மித்யாவின் விமரிசனப் புனைவுகளை இவ்வகை ஆக்கங்களாகச் சுட்டலாம். இன்னும் செறிவான கற்பனை வளத்தை வெளிப்படுத்த வேண்டியுள்ளது எனினும் பதாகை எழுத்தாளர்களும் தங்களால் இயன்ற பங்களிப்பை அவான் கார்ட் இயக்கத்துக்கு அளித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்ப இடமிருக்கிறது.

இந்தக் கட்டுரைகள் தவிர மூன்று கவிதைகள் இவ்வாரம் இடம் பெறுகின்றன- அனுகிரஹாவின் அங்கு ஒரு கப்பல், சிகந்தர்வாசியின் பிக்னிக் புகைப்படம் மற்றும்   காஸ்மிக் தூசியின் மொழிபெயர்ப்புக் கவிதை, பூசாரியின் மகன். அனுபவ வெளியை வெவ்வேறு காலங்களின் நின்று காணும் கவிதைகள் இவை: அனுகிரஹா கவிதையின் காலம் கற்பனைக்குரியது என்றால் சிகந்தர்வாசி கடந்த காலத்தின் நினைவுகளை உயிர்ப்பிக்கிறார், காஸ்மிக் தூசி நிகழ்காலத்தின் நிச்சயமின்மையைத்  தன்  கவிதையில் நிரந்தரமாக்குகிறார்.

மேற்கண்ட படைப்புகள் தவிர பதாகையின் சிறுகதை போட்டி குறித்த அறிவிப்பும் இவ்விதழில் இடம் பெறுகிறது. வாசகர்கள் தங்கள் படைப்புகளில் சிறந்தவற்றை அளித்து போட்டியில் பங்கேற்கும்படி கேட்டுக் கொள்கிறோம் – —

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.