பதாகை 31 மே 2015

ஒரு குறிப்பிட்ட கருப்பொருள் கொண்ட படைப்புகளைத் தொகுத்து அளிப்பது சுவையான விஷயம், ஆனால் வாசகர்களுக்கு அது ரசிப்பதாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இவ்வாரம், சோழகக்கொண்டலின் நத்தை வீடு வீடென்பது எது என்று நினைக்க வைக்கிறது- வீடு வேறொருவரால் நிறைகிறது, வீட்டை நாம் சுமந்து திரிகிறோம், வீடு விடுத்தலே வீடுபேறாகிறது. “தானே மூடிக்கொள்ளும்/ இமைகளுக்குப்பின்னே தாழ்திறக்கும்/ களைப்பின் பசியை/ கனவுகளின் ருசியால் நிறைக்கும்/ நித்திரையின் நத்தை வீடு” என்று சொல்லும் சோழகக்கொண்டல் கவிதையுடன் நகுல்வசனின் நத்தையின் கனவு கவிதையும் மூலையில்லா பெருவெளியில் விரிவதை வாசிக்கலாம். காலத்தின் கரையை கடக்க முடியாது தத்தளிப்பவனின் கண்ணாடியில் விரியும் வெளியை சிகந்தர்வாசி பிரதிபலிக்கிறார். சலனமில்லாத தென்றலைத் தேடி உணர்பவனின் உலகில் ஒரு நொடியை காட்சிபடுத்துகிறது ஆருர் பாஸ்கரின் வீடு. ஒரு நொடியில் துளியளவு மஞ்சளாய் மூடித்திறக்கும் அருண் கொலாட்கரின் பட்டாம்பூச்சியை காஸ்மிக் தூசி நேர்த்தியாக மொழிபெயர்த்திருக்கிறார்.

பதாகையின் எக்ஸ்க்ளூசிவ் எழுத்தாளரான மித்யாவின் ‘அவன் வருவானா’ ஒரு புதிர் அனுபவத்தை அளிக்கவல்ல கதை. மித்யாவின் பிரத்யேக உத்திகள் கதை வாசிப்பை வேடிக்கை விளையாட்டாக மாற்றிவிடுகிறது.

ஃபிலிப் ராத்தின் புனைவுகளிலிருந்து இரு பாத்திரங்களைப் பற்றி விவரிக்கும் அஜய் கட்டுரையும் இவ்வாரம் இடம்பெற்றிருக்கிறது. ராத்தின் பெண் வெறுப்பு பற்றிய அவதானிப்பு இவ்விரு பாத்திரங்களின் வழியாக உறுதிப்படுகிறதா என்று அலசும் நல்லதொரு கட்டுரை. Mary Norris எழுதிய Between You & Me – Confessions of a Comma Queen புத்தகத்தின் சிறு பகுதியை பீட்டர் பொங்கல் மொழிமாற்றம் செய்திருக்கிறார். மேலும் Izidora Angel-ன் மொழிபெயர்ப்பாளனின் அனுபவ துயரங்களையும் மொழிபெயர்த்திருக்கிறார். பல்கேரிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்வதிலிருக்கும் அடிப்படை சவால்களைப் பற்றி பேசும் கட்டுரை. இது போன்ற கட்டுரைகளை மொழிமாற்றம் செய்து தமிழிணையத்தில் ஆரோக்கியமான வாசிப்பை ஊக்குவிக்கும் பதாகையையும், பீட்டர் பொங்கலையும் பாராட்டுவோம். தீவிர இலக்கியம் ஓர் ஆன்மிக அனுவம் என்ற கேன் ஷுவேவின் கட்டுரையை மொழிபெயர்த்தது பற்றி வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். இப்போது கேன்ஷுவேவின் Last Lover நூலுக்கு BTBA விருது கிடைத்தது பற்றி பதாகை மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது. மற்றுமொரு பதாகை எழுத்தாளர் விருது பெறுகிறார்!

தொடர்ந்து உலக இலக்கியப் படைப்புகளை அறிமுகப்படுத்தி வரும் பணிக்கான உங்கள் ஆதரவிற்கு பதாகை நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

பதாகையின் சிறுகதை போட்டிக்காக, வாசகர்கள் தங்கள் படைப்புகளில் சிறந்தவற்றை அளித்து, பங்கேற்கும்படி கேட்டுக் கொள்கிறோம் – —

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.