ஆதவன் கிருஷ்ணா
எளிமையாக
எவ்வொரு முஸ்தீபுகளுமின்றி
இயல்புணர்வோடு
ஜோடிப்புகளற்ற
விரிசலின்
பிரக்ஞைகூடிய
சமிக்ஞையில்லாமல்
மரணம்
ஆதவன் கிருஷ்ணா
எளிமையாக
எவ்வொரு முஸ்தீபுகளுமின்றி
இயல்புணர்வோடு
ஜோடிப்புகளற்ற
விரிசலின்
பிரக்ஞைகூடிய
சமிக்ஞையில்லாமல்
மரணம்
வற்றிய மார் சிக்கு அடர்ந்த பசையற்ற கேசம்
வெடித்து துளை விழுந்து போன உடலாய்
நான்
பிடி பற்ற பயணப்படும் விரல்களைப் போல வாய் குவித்து அழும்
முகத்துக்காக பம்பரைக் கழற்றும் போது
அதிரும் துவக்காக மாறியிருந்தேன் (more…)
அப்படியான
கொடுத்து வைத்திராத லாட்டரித் தாள்கள் காற்றில் எறியப்படும் ராக்கெட்டுகளாய் ஆகிவந்த காலம் அது – வீணாகும் துண்டு லாட்டரிகள் பொறுக்கி எடுத்து தெருவைக் கடப்பேன் நிதானமாக நின்று எதிரில் பார்த்தபடி கைகளிலிருந்து குறி வைப்பேன் – வாகனம் கடக்காத நேரத்தில்
விர் விர்ரென்று
செலுத்திய கூரான காகித ராக்கெட்டுகள் வெயிலுக்காக கடை மேல் போர்த்தப்பட்ட கோணிப்பையின் துவாரங்களைத் தாக்கும் – மிட்டாய்கள் நட்சத்திரங்கள் போல
மினுமினுக்க வண்ண பலூன்கள் மிளிர குறுகலான இடத்தில் அமர்ந்துகொண்டு கடையின் கீழ் ஒளித்து அடுக்கி வைத்திருக்கும் பீடிக்கட்டுகளும் சிகரெட் பெட்டிகளும் தெருமார்களிடம் ரகசியமாக ஒப்படைப்பான் அவன் – என்னுடைய ராக்கெட்டுகள் தலைக்கு மேல் சென்றாலும் ஒருபோதும் அவை அவனை நெருங்குவதோ காயப்படுத்துவதோ இல்லை – இருந்தாலும் அவனுக்குள் பயம் – அவன் என்னை விரட்டுவான் சத்தம் போட்டு ஏசுவான்
என்றாலும் அவன் மீதான என் ராக்கெட் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமே இருந்தன
எதுவரை என்றால்
ஒருநாள் கொள்ளிட நீர் மண் இழுத்துக்கொண்டு அவனைக் கரைசேர்த்த பொழுது
கொலையுணர்வு கலந்த
என் ராக்கெட் தாக்குதல்கள்
நினைவில் தட்டிய வரை
பரண் மேல் கிடைத்த முப்பாட்டனின் கதை:
என் கைகள் அவள் கழுத்தை வளைத்துக் கொண்டிருந்தன. உஷ்ணமான மூச்சுப்பரப்பு அவளின் காதருகே விடப்படும்போது தலை என்ற ஒன்று தனியாக கட்டவிழ்ந்த விலங்கைப் போல தேகப்பரப்பில் மேய்ந்துகொண்டிருந்தது. அவளுடைய நீண்ட கூந்தலை இப்போது கெட்டியாக பிடித்துக் கொள்கிறேன். இந்த நிமிடம் முன்புவரை இவ்வளவு அடர்த்தியான கூந்தலைத் தொட்டுப் பார்த்திருக்கவில்லை. தொட்டுப் பார்க்காமல் இருந்திருக்கலாம். கேசத்தின் நெடி நாசிப்புழை எங்கும் பரவியது.
நெடி பரவியதும் சடுதியில் அவளை விட்டு எழுந்தேன். அவள் பானையிலிருந்த பண்டம் பொங்கிவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்தாள். அந்த நினைப்பின் இடைவெளியில் சமையல்கூடம் சென்று தடித்த அருவாமனை ஒன்றைத் தேடி எடுத்து வந்து அவளுடைய கூந்தலை இழுத்துக் கத்தரித்தேன். வெளியில் வந்து சீமெண்ணெய் ஊற்றி அந்த கூந்தலை எரித்தபிறகுதான் என் தனிமையின் அறையெங்கும் நிம்மதி பரவியது. விடிவதற்கு முன்பாகவே யார் கண்ணிலும் படாமல் அவள் அழுதுகொண்டே தனது தாய் வீட்டுக்குச் செல்வதைப் பார்த்தேன். போகட்டும் என்றே எனக்குத் தோன்றியதால், அவளைத் தடுத்து நிறுத்தவில்லை. (more…)