அக்டோபர் மாதம். முதல் தேதி. 2009ஆம் வருடம். சீனாவின் தலைநகரில் தேசிய தினம் கொண்டாடுகிறார்கள். என்னுடைய கல்லூரித் தோழன் பீஜிங் நகரத்து அடுக்கு மாடி விடுதியில் அந்த செப்டம்பர் மாதக் கடைசியில் இருந்தான். அப்பொழுதே ஒத்திகைகளை ஆரம்பித்து விட்டார்கள். விடுதியின் உப்பரிகையில் இருந்து ’வீடியோ அரட்டை செய்கிறாயா,’ எனக் கேட்டேன். அவன் பதிலோ, அதிர்ச்சி கலந்த பயத்துடன் ‘வேண்டாம்டா… சுட்டாலும் சுட்டுடுவாங்க!’ என்பதாக இருந்தது.
பீஜிங் நகரத்தில் இருந்த புறாக்கள் எல்லாவற்றையும், ஒன்று கூட விடாமல் கூண்டில் அடைத்து வைத்திருந்தார்கள். பட்டம் பறப்பதற்கு அதிகாரபூர்வமாகத் தடை விதித்திருந்தார்கள். தேசிய தினத்தன்று இந்தப் பக்கம் இரண்டு ஃபர்லாங்; அந்தப் பக்கம் இரண்டு ஃபர்லாங்கும் மூடியிருந்தது.
இந்த விழாவும் பவனியும் இன்றோ நேற்றோ உண்டானதல்ல. சிங் (Qing) வம்சாவழியினர் ஆண்ட 1644 முதல் 1912 வரை போர்களில் பெற்ற வெற்றியின் விழா ஊர்வலமாக இருந்தது. அதன் பிறகு கம்யூனிஸப் புரட்சியின் புண்ணியத்தில் இப்போதெல்லாம் தொலைக்காட்சிக்கு ஏற்றவாறு வடிவமைத்து உலா நடத்துகிறார்கள். (more…)