இருமொழிக் கவிதை

புன்னகையின் மணம்

– சிகந்தர்வாசி –

EA final 3

Though she had never spoken to him
he could not forget the way she smiled
when she saw
him riding the bicycle for the first time

When she was going away to Nanded
– where is Nanded?
– Somewhere in Maharastra
he went to the railway station and saw

her sitting next to the window
in the train but she didn’t see him

He could not forget the smile

He went to Nanded a few days later
roamed the streets
stood in the hot sun in front of
some women’s colleges
had lunch in a small hotel
-the dal was undercooked
and came back

After so many years he still remembers
the smile she gave him when he rode
the bicycle
and also the fact that the dal was undercooked

oOo

அவள் அவனுடன் பேசியதில்லை என்றாலும்
அவன் சைக்கிள் ஓட்டியதைப் பார்த்து அவள் புன்னகைத்ததை
அவனால் மறக்க முடியவில்லை

அவள் ஊரை விட்டு நாந்தேட் செல்லும்பொழுது
– நாந்தேட் எங்கு இருக்கிறது
– மகாராஷ்ட்ரா
அவன் ரயில் நிலையம் சென்று அவள் ரயிலில்
ஜன்னலோரம் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான்
ஆனால் அவள் அவனை பார்க்கவில்லை

சில நாட்களுக்குப் பின் நாந்தேட் சென்று
வீதிகளைச் சுற்றி, உச்சி வெய்யிலில்
பல பெண்கள் கல்லூரி வாசல்கள் முன் கால் கடுக்க நின்று
ஒரு சிறு ஹோட்டலில் உணவருந்திவிட்டு
– தால் தீய்ந்த வாசனை அடித்தது
ஊர் திரும்பினான்

பல வருடங்கள் ஓடிய பின்னரும்
அவன் சைக்கிள் ஓட்டும் பொழுது
அவள் புன்னகைத்தது இன்னும் கண் முன் தெரிகிறது
தீய்ந்த தால் வாசனையும் உடன் வருகிறது

இருமொழிக் கவிதை- புழக்கடையில் பனி/ Backyard Snow

நகுல்வசன்

புழக்கடையில் பனி:

1

இரவெல்லாம் பனி .
நினைவின் எச்சமாக ஆங்காங்கே,
கிளைகளில் இலைகள்
இன்னமும் தக்க வைத்துக் கொண்டிருக்கும்
வசந்தத்தின் கனவை அழித்த பெருமிதத்தில்,
குளிர்காலம் எழுப்புகிறது
தன் கண்ணாடி சாம்ராஜ்யத்தை.
அதன் சுவர்களில் காலம் அழகு பார்க்கையில்
பளிங்கு பிரதிபலிக்கிறது
வயோதிகத்தின் வாடிய வதனத்தை.

2

வெளி ஒளிர்கிறது.
இலைகளற்ற கிளைகளின் மீது, தொடர்ச்சியாக,
பௌதிக விதிகளை நினைவுகூர்ந்து,
நேர்த்தியுடன் தன்னை சமன் செய்து கொண்டிருந்தது
பனி.
ஊரில் டீபிராஸ்ட் செய்ய மறந்திட்ட
அப்பாவின் பழைய கெல்வினேடர் குளிர்சாதனப் பெட்டியில்,
இப்படித் தான், நீண்டு உறைந்திருக்கும்,
பனி.
ஓவல்டின்னை ப்ரீசரில் உறைய வைத்து
தங்கையும் நானும் ஐஸ்க்ரீமாக
அலுப்பில்லாமல் அனுபவித்தது
காலத்தின் கண்ணாடியில் ஒரு கணம் மிளிர்கிறது.
தேனீர் கோப்பையின் ஆவி அதை அழிக்க,
ஜன்னல் கண்ணாடியில் பனியின் பின்புலத்துடன்
அப்பாவின் வயதான முகம் தோன்றி மறைகிறது.

ooOoo (more…)