எஸ். சுரேஷ்

கொண்டாட்டம்

எஸ். சுரேஷ்

 

ஒன்றை ஒன்று துரத்தி விளையாடிக் கொண்டிருந்த
இரண்டு அணில்கள் ஜெனரலை பார்த்தவுடன்
ஆட்டத்தை நிறுத்திவிட்டு இரண்டு கால்களில் நின்றுக்கொண்டு
“குட் மார்னிங் ஜெனரல்”
“குட் மார்னிங் ஜெனரல்”
என்று சல்யூட் அடித்துவிட்டு அதே போஸில் அசையாமல் நின்றன
ஜெனரல் தலையை ஆட்டிவிட்டுச் சென்றார்
அவர் உருவம் மறைந்தபின் மறுபடியும் அணில்கள்
ஒன்றை ஒன்று துரத்தி விளையாட தொடங்கின

ஒளிப்பட உதவி – Studio Bingo

கவியின் கண்- “இறைச்சிக்கும் உதவாதவர் நூறு கோடி”

எஸ். சுரேஷ்

இனி என்ன விற்பார்கள்?
– விஜயலட்சுமி

ஆற்றையும் காற்றையும் வெயிலையும் விற்கவும்
மழையையும் மண்ணின் துகள்களை விற்கவும்
பதினான்காம் காலையின் அழகை விற்கவும்
காலைப்பொழுதின் சப்த ஸ்வரங்களை விற்கவும்

அழைப்பு விடுக்கிறார்கள்! – வருக, உலகின்
பெரும் பணப்பை கொண்ட கனவான்களே –

நீல மலைகளை உங்களுக்காகத் தோண்டி எடுக்கவும்
அழகிய மரங்களைப் பிடுங்கி எடுக்கவும்
மகரமும் பனியும் குளிரும் உங்களுக்கு
மறந்து விடாமல் முடிந்து கொள்ளவும்

சலவை செய்த வெள்ளைச் சிரிப்புடன் நாட்டை
கூறு போட்டு விற்பதற்குக் காதலுடன் நிற்பவர்கள்
உரக்கக் கூவுகிறார்கள்- கேரளத்தைக் கூறு போடுங்கள்,
வெட்டி எடுங்கள் கசாப்பு கத்தியால்.

இனி விற்பனைக்கு இருப்பது – தம்மை வேறுபடுத்தும்
அடையாளங்களைக் கழுத்தில் தொங்க விட்டிருப்பவர்,
இறைச்சிக்கும் உதவாதவர் நூறு கோடி-
இவர்களை வாங்கிக் கொள்ள இனி யார் வருவார்?

மலையாளத்திலிருந்து தமிழாக்கம் – app_engine  (more…)

நெருப்புக்கோழிகளின் நடனம்

எஸ். சுரேஷ்

உறங்கலாம் என்று படுத்தபோது
“தொப் தொப் தொப் தொப் ” என்று
மாடி போர்ஷனில் யாரோ குதிக்கும் சப்தம் கேட்டது
தூங்க முடியாமல் மேல் போர்ஷனுக்கு போன் செய்தேன்
“ஹலோ” என்றது போனை எடுத்த நெருப்புக்கோழி,
“சாரி, நாங்க கொஞ்சம் அதிகமாக குதித்துவிட்டோம்.
இனி அப்படி குதிக்கமாட்டோம்,”
என்று சொல்லிவிட்டு போனை வைத்தது.
இப்பொழுது “தொப் தொப் தொப்” என்ற சப்தம்
மெதுவாக சப்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது

எதனாலும் குடிமுழுகிப் போய்விடாது

கவியின்கண் – கலையொன்று
– எலிசபெத் பிஷப் –
 
இழப்புக் கலையில் தேர்ச்சி அடைவது கடினமல்ல;
தொலைந்து போகும் நோக்கம் நிறைந்தவை ஏராளம் உண்டு,
எதையும் இழப்பதால் ஒன்றும் குடிமுழுகிப் போவதில்லை.

(more…)

வீடு தேடி வந்த யானை

எஸ். சுரேஷ்

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த யானைக்குட்டி
திடீர் என்று ஒரு வீட்டின் காலிங் பெல்லை அழுத்திவிட்டு
தனக்கு எதுவும் தெரியாதது போல் நடையைக் கட்டியது

கதவைத் திறந்து பார்த்த சிறுமி, ‘அம்மா, யானை, யானை!’
என்று கத்த, குட்டி யானை அவளைத் திரும்பிப் பார்த்தது.
‘யான பாக்கறது, யான பாக்கறது,’ என்று இன்னும் அதிகமாகக்
கத்தினாள். சிறுமியைப் பார்த்துக் கொண்டே குட்டி யானை
அடுத்த வீட்டு காலிங் பெல்லை அழுத்தியது.

கவிஞர் குறிப்பு-

button

 

ஒளிப்பட உதவி- Galleryhip