கவியின்கண்

கவியின் கண்- மகத்தான காதல்

 எஸ். சுரேஷ்

அவளுக்கு வயது அறுபது. தன் வாழ்வின்
மகத்தான காதலை வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

தன் நேசத்துக்குரியவன் கைகோர்த்துச் செல்கிறாள்.
காற்றில் ஆடுகிறது அவளது கேசம்.
அவளை நேசிப்பவன் சொல்கிறான்::
“உன் முடி முத்து போல் இருக்கின்றது:”.

:முட்டாள் கிழம்”
என்கின்றனர் அவள் பிள்ளைகள்.

– அன்னா ஸ்விர்ஸ்டின்ஸ்கஹா  

இதே தொடரில், முதியோரின் பிரச்சினைகள் பற்றி எழுதியபோது, இது குறித்து இன்னும் பேச வேண்டியிருக்கிறது என்றார் நண்பர் ஸ்ரீதர்.

முதுமையை வேறொரு கோணத்தில் இப்போது பார்க்கலாம் – இந்தக் கவிதை அதற்கொரு நல்ல அறிமுகம்.

முதுமை, அல்லது மத்திய பருவத்தின் பின்காலம் (இதற்கொரு சொல் உண்டா என்ன?), உன்னை தனிமை தொடரும் பருவம். நகர்ப்புறச் சூழலில்தான் இதைச் சொல்கிறேன், கிராமங்களின் கதை வேறு. (more…)

கவியின் கண்- உடல்களைக் கொள்ளும் வெளி

 

கடற்கரை – சோபியா தி மெலொ ப்ரெனர் ஆந்த்ரிஸன்

கடந்து செல்லும் காற்றில் பைன் மரங்கள் முனகுகின்றன
வெயிலடிக்கிறது மண்ணில், கற்கள் சுடுகின்றன

உலகின் விளிம்பில் உலவுகின்றனர் விசித்திர கடற்கடவுளர்
உப்புப் பொருக்கிட்டு, மீன்களைப் போல் மின்னுகின்றனர்

வானின் ஒளியினுள் கற்களைப் போல்
திடீரென்று காட்டுப் பறவைகள் வீசப்பட்டு
செங்குத்தாய் உயர்ந்து மரணிக்கின்றன
அவற்றின் உடல்களை வெளி எடுத்துக்கொள்கிறது

ஒளியைத் தகர்க்க அலைகள் ஆர்ப்பரிக்கின்றன
அவற்றின் புருவங்களில் தூண்களின் அலங்காரம்

பாய்மரத் தொல்நினைவு
பைன்களில் ஆடிக் கொண்டிருக்கிறது.

(from “Marine Rose : Selected Poems”, Sophia de Mello Breyner, translated by Ruth Fainlight, Published by Black Swan Books, Redding Ridge, CT, 1988. கவிதையின் ஆங்கில மூலம் இங்கிருக்கிறது.)

முன்னொரு பதிவில், கலை எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளில் தகவல் தொடர்பும் ஒன்று என்று எழுதியிருந்தேன். மாபெரும் கலைஞர்கள் கலையைக் கொண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர்.

மனிதர்களுக்கிடையே துல்லியமான உணர்வுப் பரிமாற்றம் என்பது மிகவும் கடினமான விஷயம், சஹ்ருதயர்கள் மட்டுமே ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முடியும். இதனால்தான் கலைஞர்கள் தங்கள் படைப்பைப் புரிந்து கொள்ளக்கூடியாவர்களைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். இதனால்தான் மாபெரும் கலைஞர்கள் தங்கள் கற்பனையின் எல்லையைக் குறுக்க எதையும் அனுமதிப்பதில்லை. கலைத்தேடல், காலத்துக்கும் இடத்துக்கும் அப்பாற்பட்டது. (more…)

கவியின் கண் – தொலைந்த சொர்க்கம்

எஸ். சுரேஷ்

 
தெருவின் பெயர் – நீங்கள் தெருப்பலகையில் காணலாம்,
எனக்குஅதன் பெயர் சுவர்க்கம், என் தொலைந்த சுவர்க்கம்.
ஊரின் பெயர்- நீங்கள் வழிப்போக்கர்களிடம் கேட்கலாம்,
எனக்கு அதன் பெயர் சுவர்க்கம், என் தொலைந்த சுவர்க்கம்.
தொலைந்து போனதால், அதன் பூங்காக்கள் பூத்திருக்கின்றன,
என் இதயம் துடிக்கிறது, தெறிக்கிறது, தூண்டில் மீனாய் துள்ளுகிறது.
மின்னும் நதியின் கரையோர வளைகளில் கருப்பு எலிகள்,
வரவேற்று அனுமதிக்கப்பட்ட அவற்றின் பூலோக சுவர்க்கம் அழிவற்றது.
பீர் குடிக்கையில் கண்ணாடி விளிம்புகளில் உப்பு பூசச் சொல்லி,
முன்யோசனையுடன் நீ அறிவுறுத்தும்போதும் உற்சாகமாயிருந்தாய்.
என்னவொரு காலம் – காலண்டரில் பார்க்க வேண்டும்,
நீ நைட்டி மாதிரி, அணிந்திருக்கையில் உள்ளும் புறமும் ஆண்டவன்.
நீ மென்மையானவன், பீங்கான் கிண்ணம் போல் உடைகிறாய்- 
கடவுளின் ஒளி அதன் வழி வருகிறது, எல்லாம் தெளிந்து வருகிறது.
உன் கண்முன்னரே அவன் உன் காயக்கூட்டினுள் எட்டிப் பார்க்கிறான்,
கூனியிருக்கிறாய்- ஆச்சரியமில்லை- தோள்களில் அமர்ந்திருப்பது யார்!
உன் சுமை ஏற்றுக் கொள்வேன், ஆனால் என் பெயர் எழுதப்படவில்லை,
மழையில் ஒலிக்கும் இசை கேட்டபடி, பூமரப் பாதையில் போவோம் வா-
இளஞ்சூட்டு அருவியென சாக்கடையில் நீர் விழுகையில் 
                         மலையிலிருந்து இறங்குவதுபோல்,
ஸ்லாவ்யன்கா வாசிக்கின்றனர்கீழே வீழ்கிறது,
                                               என் “சுவர்க்கம்”
– Elena Shvarts
 
வாழ்வில் நாம் பல பிணைப்புகளை உருவாக்கிக் கொள்கிறோம் : பெற்றோர், மனைவி, மக்கள், நண்பர்கள், வாகனங்கள், புத்தகங்கள், இசை, திரைப்படம் என்றும் இன்னும் பலவும். ஆனால் பிணைப்புகள் அனைத்தினும் மிகவும் வலிமையான பிணைப்பு மண் மீதானது. 

(more…)

கவியின் கண் – “மரணத்தைப் பற்றி, மிகையின்றி”

 எஸ். சுரேஷ் –

மரணத்தைப் பற்றி, மிகையின்றி

நகைச்சுவை புரியாது,
நட்சத்திரத்தைக் கண்டெடுக்கத் தெரியாது,
பாலம் கட்ட முடியாது.
வலை பின்னவோ, சுரங்கம் வெட்டவோ,
வயல் உழவோ, கப்பல் கட்டவோ,
கேக் ஒன்றை பேக் செய்யவோ தெரியாது.

நாளைக்கான நம் திட்டத்தில்
அது முடிவாய்ச் சொல்வதே சட்டம்,
ஆனால் இதைப் பேசி ஒரு பயனுமில்லை

தன் வேலை நிமித்தமாய்
ஒரு காரியத்தையும் செய்து கொள்ளத் தெரியாது:
இடுகுழி வெட்டவோ,
கல்லறைப் பெட்டி செய்யவோ,
தனக்கப்புறம் துடைத்துக் கொடுக்கவோ,
அதனால் முடியாது.

கொலைத்தொழில் ஒன்றே நினைப்பாய் இருந்தாலும்
தன் வேலையை உருப்படியாய்ச் செய்வதில்லை,
நாம் ஒவ்வொருத்தரும்தான் அதன் முதல் பலி போல்
ஒரு ஒழுங்குமுறை கிடையாது, ஒரு திறமை இல்லை

அதற்கும் வெற்றிகள் உண்டே,
ஆனால் அதன் எண்ணற்ற தோல்விகளைப் பாருங்கள்,
குறி தவறிய அடிகள்
திரும்பத் திரும்ப எத்தனை முயற்சிகள்! (more…)

கவியின் கண்- நீ உன்னை விட்டுச் செல்கிறாய்

எஸ். சுரேஷ்

 

ஒவ்வோர் அதிகாலையும் திரைச்சீலை விலகுகிறது,
தனியே, இருள் கரைவதை நீ கேட்டுக் கொண்டிருக்கிறாய்,
டிக்டிக்கென்று நட்சத்திரங்கள் விலகிக் கொள்வதை,
கண்விழித்த பறவைகளால் உலுக்கி எழுப்பப்பட்ட
வானம் மீண்டும் காற்றிலாடும் ஸ்கார்பாகிறது
நீங்கள் ஒருத்தரையொருத்தர் தொட்டுக்கொண்டல்ல,
இணைந்து நடந்து செல்கிறீர்கள்,
ஒருவர் மீதொருவர் சாய்ந்து,
ஒருவருள்ளொருவர் என்று மாலை வரை,
மாலையில், தனியே,
நீ உன் வாசலில் நிற்கும் முரட்டு இரவை விரட்டுகிறாய்
அதற்காக அழுமளவு இனியது, ஈரமான தெரு நாய் போல்,
நீ காகங்கள் கரைவதைக் கேட்க விரும்பவில்லை,
இந்த கட்டத்தில் பேசப்பட வேண்டிய வரிகள்,
நாளுக்கு நாள் குறைந்து வருவதை,
இன்னும் எத்தனை நாட்களுக்கென்று எழுதி வைக்கப்பட்டிருக்கிறது
நிழல் நீள்கிறது, உடலை உள்ளிருந்து வெறுமை நிறைக்கிறது,
வேறொருத்தர் உன் இடத்துக்கு வருகிறார்கள்.
ஒவ்வொரு அடியாக நீ உன்னை விட்டுச் செல்கிறாய்.

Poem by Claire Malraux (more…)