குஷ்வந்த் சிங்

அஞ்சலி : குஷ்வந்த் சிங் – வண்ணமயமான வாழ்க்கை

– வெ. சுரேஷ் – 

சென்ற மாதம் மறைந்த மிக மூத்த எழுத்தாளர் (99 வயது!) குஷ்வந்த் சிங் தமிழ் இலக்கிய உலகத்தாரால் அவ்வளவாக கண்டுகொள்ளப்படவில்லை, மறைவின்போதும். அச்சில் வரும் இலக்கியச் சிறுபத்திரிக்கைகளைப் பற்றி அதற்குள் சொல்ல முடியாது, ஆனால் தமிழ் இலக்கியம் சார்ந்த வலைதளங்களைப் பார்க்கும்போது அப்படிதான் தோன்றுகிறது (சொல்வனம் இணைய இதழில் வெங்கட் சாமிநாதன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். மற்றபடி அவரைப் பற்றி ஆனந்த விகடனில் தான் எழுதிய கட்டுரை வெளிவரவிருப்பதாக சாரு நிவேதிதா தன் வலைப் பக்கத்தில் அறிவித்துள்ளார்).

நம் வாரந்தர வணிகப் பத்திரிக்கைகள் வழக்கம் போல் அவரைப் பற்றி பொதுபுத்திக்கு எப்போதுமே தெரிய வந்திருந்த செய்திகளையும் அவரது ஏ ஜோக்ஸ் மற்றும் கிளுகிளுப்பான பக்கங்களை வெளியிட்டும் நினைவு கூர்ந்தன. The Ilustrated Weekly ஆசிரியராக அவர் செயல்பட்டு அப்பத்திரிக்கையைப் பிரபலமாக்கியதும் நினைவுகூரப்பட்டது. Train to Pakistan என்ற நாவலின் பெயர் உதிர்க்கப்பட்டதும் வாஸ்தவம்தான். ஆனால், தமிழின் தீவிர இலக்கிய உலகம் அவரை முற்றிலுமாகப் புறக்கணித்தேவிட்டது என்று தோன்றுகிறது. (more…)