சூர்யகாந்த் திரிபாதி நிரலா

அடிக்கட்டை

செந்தில் நாதன்

yellow-wagtail-317598_1280

 

அது இப்போது வெறும் அடிக்கட்டைதான்.
அதன் அழகு குலைந்து
ஆபரணங்கள் தொலைந்தன.

அது வசந்தத்தில் உயிர்ப்பதில்லை,
பசுமையில் வில்லாய் வளைவதில்லை,
அதன் மலர்களில் இருந்து காமன் கணைகள் தொடுப்பதில்லை,
அதன் நிழலில் பயணிகளின் பெருமூச்சு கேட்பதில்லை,
காதலர்களின் கண்ணீர் காண முடிவதில்லை.

ஒரேயொரு கிழப்பறவை மட்டும்
ஏதோ நினைவில் அமர்ந்திருக்கிறது.

௦௦௦

ஹிந்தி கவிஞர் சூர்யகாந்த் திரிபாதி, ‘நிராலா’ வின் கவிதை.
ஆங்கில மொழிபெயர்ப்பு விக்ரம் சேத், அதன் தமிழாக்கம் செந்தில் நாதன்.