தனுஷ் கோபிநாத்

சிறந்த இருபது மலையாள நாவல்கள்- II 11-20

தனுஷ் கோபிநாத், ஷிம்மி தாமஸ்

Enipadikal (Ladder steps) – Thakazhi

கேசவப்பிள்ளையையும் திருவாங்கூர் செயலகத்தில் அவரது வளர்ச்சியையும் விவரிக்கும் கதை. அப்போது திருவாங்கூர் சமஸ்தானமாக இருந்த காலத்தில் நிகழும் கதை. கேசவப்பிள்ளை ஒரு குமாஸ்தாவாக வேலையில் சேர்கிறான், அதன்பின் அதன் படிநிலைகளில் மெல்ல மெல்ல ஏறி முதன்மைக் காரியதரசியாக உயர்கிறான். வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நபர்களோடு தனக்கு ஏற்படும் தொடர்புகளைச் சரியாக பயன்படுத்திக் கொள்வது அவனது வளர்ச்சிக்குக் காரணமாகிறது. தன் வெற்றிக்கு உதவுமென்றே உறவுகளைப் பேணுகிறான் கேசவப்பிள்ளை. இது குறித்து அவனுக்கு எந்த குற்றவுணர்ச்சியும் இல்லை. ஆனால் அத்தனையும் ஒரு நாள் முடிவுக்கு வருகிறது. ஏணிப்படிகள் ஸர் சி,பி.யின் திவான் ஆட்சி முதல் கேரள மாநிலத்தில் அமைந்த முதல் கம்யூனிஸ்ட் அரசு வரையிலான காலகட்டத்தின் வரலாற்றை தெளிவாக விவரிக்கிறது.

பரிந்துரைக்கப்படும் இவரது பிற நூல்கள் : Chemmeen, Randidangazhi (more…)

சிறந்த இருபது மலையாள நாவல்கள்- I 1-10

தனுஷ் கோபிநாத், ஷிம்மி தாமஸ்

மலையாள இலக்கியத்தின் சிறந்த இருபது நாவல்கள் இவை என்று நம்புகிறோம்.

நாங்கள் வாசித்த நாவல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் இது.

1 கஷக்கின்தே இதிஹாசம் (The Legend of Khasak)– O V Vijayan

மலையாள இலக்கியத்தில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்கிய நாவல் என்று இதைக் கருதுகிறேன் – கஸக்கிற்கு முன், கஸக்கிற்குப் பின் என்று பிற நாவல்களை வகைமைப்படுத்தும் அளவுக்கு வலிமையான தாக்கத்தை ஏற்படுத்திய நாவல் இது. விஜயன் இந்த நாவலை முன்னரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தாலோ, அல்லது Gregory Rabassa போன்ற ஒரு மொழிபெயர்ப்பாளர் அவருக்குக் கிடைத்திருந்தாலோ இது உலக அளவில் போற்றப்பட்டிருக்கும். கஸக்கில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் ரவி அதன் தொன்மங்கள், மக்கள், அவன் கஸக்கைவிட்டு பின்னர் வெளியேறுவது என்று ரவியின் பயணத்தை விவரிக்கும் நாவல். ரவியின் பௌதிக, ஆன்மிக பொருளை வரையறுக்கும் நாவல் என்றுதான் இதைச் சொல்ல வேண்டும். மூச்சுத்திணற வைக்கும் அவமானத்தைவிட்டுத் தப்பிச் செல்லும் ரவி, மிக அசாதாரணமான இந்த இடத்தில் அடைக்கலம் புகுகிறான், அவனால் புரிந்து கொள்ள முடியாத மனிதர்களைச் சந்திக்கிறான். இதை எழுத பன்னிரெண்டு ஆண்டுகள் ஆயிற்றாம், மலையாள இலக்கியத்தில் தடம் பதித்த நாவல் இது.

ஆங்கில மொழிபெயர்ப்பு – ஓ வி விஜயன்

பரிந்துரைக்கப்படும் பிற நூல்- Dharmapuranam (more…)