மாதம் இருமுறை சிற்றிலக்கிய பத்திரிகையான ‘மணல்வீடு’, தமிழின் கூத்துக்கலைகளை பற்றிய கவனத்தையும் விழிப்புணர்வையும் உண்டாக்க தொடர்ச்சியான முன்னெடுப்புகளை செய்து வருகிறது. இவ்வருட புத்தக கண்காட்சிக்கு தங்களுடைய ‘மணல்வீடு இலக்கிய வட்டம்’ சார்பாக கொண்டு பா. ராஜாவின் மாயப்பட்சி (கவிதை தொகுப்பு), மயூரா ரத்தினசாமியின் மூன்றாவது துளுக்கு (சிறுகதை தொகுப்பு) மற்றும் தவசியின் அழிபசி (கவிதை தொகுப்பு) என்று மூன்று புத்தகங்களை கொண்டு வருகிறார்கள். புத்தக வெள்யீடுகளுடன், தொல்கலைகளின் ஆதாரவடிவம் மாறாமல் உயிர்ப்போடு வைத்திருக்கும் கூத்து கலைஞர்களுக்கான அங்கீகாரமும், விருது வழங்குதலும் முக்கிய நிகழ்வாக இருந்தது. புதிய புத்தகங்களைப் பற்றியும், தங்களுடைய அடுத்த செயல்திட்டங்களைப் பற்றியும் திறந்தமனதுடன் பதாகையுடன் நிகழ்த்திய உரையாடல்.
பதாகை: மணல்வீடு வெளியீடாக கவிதைப் பிரதிகளும், சிறுகதை தொகுப்பும் ‘மணல்வீடு’ கொண்டு வருவது மகிழ்ச்சியானதொரு விஷயம். இந்த நூல் தேர்வுகளைப் பற்றி, மணல்வீட்டின் பதிப்பக கொள்கைகளைப் பற்றி கூறுங்களேன்.
மணல்வீடு ஹரிகிருஷ்ணன்: படைப்பு அதன் இடத்தை அடையும் . உரியதை தேடிக் கண்டும் மணல்வீடு வெளியிடும். கலை இலக்கிய சார்ந்த ( பிரதி- நிகழ்கலை இரண்டுக்கும்) சமதையான மதிப்பீடுகள், உரையாடல்கள் உருவாக்குதல் சமரசமற்று தகுதியான அப்படைப்புகளை நூலாக்கம் செய்வதும் பின் அதன் செயல்களாம்.. (more…)