ரத்ன பிரபா

அர்ஜுனன் காதல்கள்- வாசகர் எதிர்வினை

ரத்ன பிரபா

“என் உச்சந்தலை நிஜமாகவே திறந்து கொண்டது போலிருக்கும்போது, அதுதான் கவிதை என்பது புரிந்துவிடுகிறது,” என்றார் எமிலி டிக்கின்சன். கவிதை எழுதுவதற்குத் தகுந்த கருப்பொருள் தேடிச் செல்ல மகாபாரதத்தை விடவும் சிறந்த, நிரம்பி வழியும் கொதிகலன் எது இருக்க முடியும் – எத்தனை வடிவங்கள் இருந்தாலும், எத்தனை கோணங்கள் வெளிப்பட்டிருந்தாலும், மீண்டும் மீண்டும், பல பத்தாயிரம் முறை திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட பின்னும், தன் புத்துயிர்ப்பையும் அழகையும் தக்க வைத்துக் கொண்டுள்ள உலகின் மாபெரும் காவியமல்லவா அது!

ஊர்வசி, உலூபி, உத்தரை, சுபத்திரை: அர்ஜுனன் வாழ்வில் புகுந்த நான்கு வெவ்வேறு பெண்களுடனான அவனது உறவுகள் குறித்த நான்கு பகுதிகளாக கவிதைத் தொடர் ஒன்று எழுதப்பட்டிருப்பது பற்றி கேள்விப்பட்டதும், இவர்களைக் காட்டிலும் புகழ்பெற்ற திரௌபதியை விடுத்து இந்த நால்வர் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்று யோசித்தேன். இதில் சிந்தனைக்குரிய இன்னொரு விஷயம், சுபத்திரையின் தேர்வு – மற்ற மூவரோடு ஒப்பிட்டால் இவள் மரபு சார்ந்த துணை உறவானவள். இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் கவிதைகளை வாசிக்கத் துவங்கினேன். ஒவ்வொரு காதலும் கவிஞரின் மனதினூடே விவரிக்கப்படும்போது நான்கு பெண்களின் சித்திரமும் கவிதைகளின் மையத்திலுள்ள கிருஷ்ணன் இறுதி அடிகளில் வருவதும் மிகச் சிறப்பான வளர்ச்சியை அடுத்தடுத்த கவிதைகளிள் அடைவதைக் கண்டுணர முடிந்தது. (more…)