வெ கணேஷ்

அர்ஜுனன் காதல்கள் – ஊர்வசி

வெ. கணேஷ்

அலையிலாக் கடலின்
ஆழத்தில் ஜனனம்;
நித்ய யுவதி வடிவம்;
தேவர், மனிதர், அசுரர், கந்தர்வர்
எண்ணற்றோரைக் கிறங்கடிக்கும்
ஊர்வசிக்கு இது ஒரு
புது அனுபவம்.
மானிடன் ஒருவனின்
மறுதலிப்பு.

அர்ஜுனன் அறைக்கு
சென்று திரும்பியவள்
கண்களில் ஏமாற்றம்.
கரை மீறும் நதியலை போல்
வெகுண்டு
வேகவேகமாய்
அலங்காரத்தை கலைத்தாள்.

உடைகளைக் கழட்டத் தொடங்கியதும்
கொஞ்சம் அமைதி.
மார்புக்கச்சைகளை விலக்கியதும்
மின்னலொளியில் ஒரு முறை
பார்த்த மானிடன்,
புருரவஸ்-சின் நிர்வாண நினைவு.
கூடவே ஜோடி ஆடுகளின் பிம்பமும்.

குரு வம்சத்து மூதாதையனுடன்
முயங்கியதால்
நான் தாய் ஸ்தானமாம்,
வணக்கத்துக்குரியவளாம்,
புணர்வதற்கில்லை என்று சொல்லியனுப்பி விட்டான்.
பாவாடை தரையில் விழவும்
நினைவுக் குளத்திற்குள்
மூழ்கும் முன்னர்
இதழில் புன்சிரிப்பு:
அர்ஜுனனைக் கைபிடித்திழுத்து
அருகிருந்து பார்த்த
அவனது முகம் தோன்றி மறைந்தது-
“புருரவஸ் ஜாடைதான் உனக்கு”

+++++

முட்படுக்கையில்
கிடப்பவன் போல்
புரண்டான் அர்ஜுனன்,
நிர்வாணமாய்
நீச்சலடிக்கும்
ஊர்வசியின்
காட்சி அவன் கனவில்.
ஹ்ம்ம்ம்…
சாபமிட்டுச் சென்றவளை
இனி சந்திக்க முடியாது.
பெருமூச்சு விடுபட்டு
ஊர்வசி சூடிய
ஒற்றை மலரை
விழ வைத்தது.

+++++

“தாயையல்ல அர்ஜுனா,
நீ நிராகரித்தது மகளை…
நிம்மதியாய்த் தூங்கு!”
கண்ணன் சிரிக்கிறான்.

சரவண ரவி

வெ கணேஷ்

மனதில் அந்தப் பெயர் ஓடிக் கொண்டிருந்தது. சரவண ரவி. சரவண பவ எனும் திருமந்திரம் என்கிற கர்னாடக இசைப் பாடல் ஒன்று உண்டு. சாமி பேரை சொன்னாலாவது போகும் வழிக்கு புண்ணியம் உண்டு. அது என்ன பேர்! சரவண ரவி. ஐம்பது வருடத்திற்கு முன் அந்த பேரை கேள்விப்பட்ட பிறகு அந்தப் பெயர் கொண்ட வேறொருவர் யாரைப் பற்றியும் இன்று வரை கேள்விப்பட்டதுமில்லை ; சந்தித்ததுமில்லை..

சரவண ரவி! மிகவும் வித்தியாசமான பெயர் ; உச்சரிக்கும் தருணங்களிலெல்லாம் மாறாத புன்முறுவல் பூக்கும்.

சித்தார்த் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து தன் நண்பர்களின் போட்டோ மற்றும் குறிப்புகள் அடங்கிய ஒர் இணையப் பக்கத்தை பல மணி நேரங்களாக பார்த்துக் கொண்டு இருப்பானே! அவனிடம் சொல்லி இந்த பெயர் உடையவர்களை தேடச் சொல்ல வேண்டும். பேரன் கிருபாவிடம் சொல்லியாவது தேடச் சொல்ல வேண்டும். (more…)

ஒரு கை

வெ கணேஷ்

“நான் எண்ணற்ற பௌத்தர்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் தான தர்மங்கள் செய்கிறேன்; பல புத்த கோயில்களுக்கு நிவந்தங்கள் அளிக்கிறேன். இத்தகைய செயல்கள் எனக்கு என்ன மாதிரியான நல்-விளைவுகளைத் தரும்?” என்று அரசன் கேட்டபோது தயக்கமோ, முதன்முதலாக தென்- சீனாவின் பேரரசனைச் சந்திக்கிறோம் என்ற வியப்புணர்வோ இல்லாமல் அந்த அயல்நாட்டு பௌத்தர் மறுப்பது போல் தலையசைத்து, “ஒரு விளைவும் தராது” என்றார்.

அரசன் நெற்றி சுருக்கினான்; பிறகு சுதாரித்துக் கொண்டு வினவினான். “புத்தர் இருக்கிறாரா? அவரைக் காணுதல் சாத்தியமா?”

இம்முறை போதி தர்மர் பதிலளிக்கச் சில வினாடிகள் எடுத்துக் கொண்டார், “இல்லை”.

போதி தர்மரின் பதில்கள் அரசனுக்குச் சினமளித்தன. “என் முன் நில்லாதீர். இங்கிருந்து எங்காவது சென்று விடுங்கள்,” என்று அவன் ஆணையிட்டதும் போதி தர்மர் புன்னகைத்தார். அவர் உதடுகள் திறந்த மாதிரி தெரியவில்லை என்றாலும் உள்ளுக்குள் ஒரு பதற்றமுமில்லாமல் அவர் சிரித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அவரின் விழிகள் சபையோருக்கு உணர்த்தின. (more…)