நீங்கள் எழுத்தாளராவதற்கான காரணம் என்ன?
எழுத்தாளராகும் விருப்பம் சிறு வயதில் எனக்கு இருக்கவில்லை, ஆனால் ஏதோ ஒன்றைச் சாதிக்கும் ஆசை இருந்தது. பள்ளியில் என்னால் எல்லாரையும் போல் இருக்க முடியவில்லை: என் வயதுக்கு மீறிய முதிர்ச்சி கொண்டவளாக இருந்தேன், ஏராளமாய் படித்தேன் – எனக்கு பத்து வயதாகியிருந்தபோது, என் அம்மா Complete Works of Shakespeare வாங்கிக் கொடுத்தார், அது என்னை முழுமையாய் வசீகரித்துக் கொண்டது. ஆனால், அதன்பின் எல்லாம் மாறிவிட்டது: அம்மா என் அப்பாவைவிட்டுப் பிரிந்து, வேறொரு புதிய ஊருக்கு எங்களை அழைத்துச் சென்று எங்கள் பெயர்களை மாற்றிவிட்டார். அங்கு நான் மானுடவியல் ஆய்வாளர் போல் நடந்து கொள்ளத் துவங்கினேன், இந்த ஊரின் வினோத மத்திய வர்க்க மக்களைக் கூர்ந்து கவனித்து அவர்களைப பற்றி கோட்பாடுகளை உருவாக்கிக் கொள்ள ஆரம்பித்தேன். தனியாய் நெடுந்தொலைவு பள்ளி நடந்து செல்லும் வழியில், தென்படும் பொருட்களை எனக்கு நானே விவரித்துக் கொள்ளப் பழக்கிக் கொண்டேன், அவற்றுக்குத் துல்லியமாய் பொருந்தும் சொற்களை அறிந்துகொள்ள முயற்சித்தேன். (more…)