மணவாழ்வின் மதியம் – காலத்துகள் சிறுகதை

காலத்துகள் “நைட் பூரா இருக்கணுமா” “..” “பதினொண்ணு, பண்ணண்டுக்கு கிளம்ப முடியாதா” “..” அழைப்பைத் துண்டித்தாள். சுவர்க் கடிகாரத்தின் சதுரம் மங்கலாகத் தெரிந்தது, அலைபேசியில் பார்த்தாள், ஏழு நாற்பது. அறை விளக்கை போடாமல் ஜன்னல் அருகே சென்று இருளினூடே வெளியே நோக்கினாள். மழை நின்றுவிட்டிருக்க, தெருவிளக்கின் ஒளி எதிர்வீட்டின் கண்ணாடி ஜன்னலில் சிந்தி சாலையில் தேங்கியிருக்கும் நீர்க் குட்டையில் விழுந்திருந்தது. கணுக்காலுக்கு மேல் புடவையை இடது கையால் தூக்கிப் பிடித்தபடி அவ்வொளியை தாண்டிச் சென்ற பெண்ணின் வலது … Continue reading மணவாழ்வின் மதியம் – காலத்துகள் சிறுகதை