-அதிகாரநந்தி-

“வணக்கம் சார்”
”சொல்லுய்யா. என்ன விஷயம்? என்னையெல்லாம் ஞாபகம் வெச்சுருக்க போலிருக்கே”
“என்ன சார் இப்படிச் சொல்றீங்க. போன வாட்டி நீங்க அனுப்பினத பதிப்பிக்க முடியாம போச்சு”
“ம்ம்”
“சார் விஷயம் தெரியுமா? நம்ம ராமசாமிய ஆஸ்பத்ரில அட்மிட் பண்ணியிருக்காங்களாம்”
“என்னவாம்”
“ஹார்ட் அட்டாக் தான் சார். கொஞ்சம் சீரியஸ்னு சொல்லிக்கறாங்க”
“ம்ம்”
“நீங்க அவரப்பத்தி ஒரு கட்டுரை எழுதிக் கொடுத்தீங்கன்னா…. இந்த வாரமே போட்டுறலாம்”
“ம்ம்”
“இன்னிக்கு சாயங்காலத்துக்குள்ள…”
”மெயில் பண்றேன்யா…”
இரண்டு மணிநேரம் கழித்து.
”சார்…”
“முடிச்சாச்சு இதோ மெயில் பண்றேன். எதையும் எடிட் பண்ணிடாத”
“சார், அதில்லை. அவர் வெறும் செக்கப்புக்கு தான் போனாராம். இப்போ திரும்ப வீட்டுக்கு போயிட்டார்னு சொல்றாங்க.”
”ம்ம்… நான் அனுப்பறேன் ஃப்யூச்சர்ல யூஸ் பண்ணிக்கோ”